Tuesday, June 25, 2013

பிரிவாற்றாமை

வாரயிறுதி ஏன் வண்டிப் பூட்டி வருது
வாராதோ விரைந்து வானிலே பறந்து !

பிற கதி என்று ஐந்து நாட்கள் கழிய
பிரகதி என்று இரு நாட்கள் இனிக்குது !

மடியில் வைத்த கணினி இன்று உன்
மழழை முகம் காட்டுதடி !

தோளிலே சுமக்கும் பை  ஒர்நாளிலேஉன்னை
தூக்கிய ஞாபகம் சொல்லுதடி !

கண்மையிலே கண்ணத்தில் வைத்த பொட்டு
உண்மையிலே என் உசிர் வாங்கி போகுதடி !

பிஞ்சி கை மூடிய பொக்கிஷம் காண
நெஞ்சமும் கொஞ்சம் அலையுதடி  !

அஹிம்சை வழி சென்ற அன்னலுக்கும் உன் 
அடி உதை அமிர்தமடி !

எதை நினைத்து சிரித்தாய் ,என்ன சொல்ல தவித்தாய்
அதையறிய கூகுலும் குழம்புதடி!

இரண்டடி குறள் சொன்ன பிரிவாற்றாமை வேண்டாம் இந்த
ஐந்தரையடி அப்பனின் குரல் கேளாயோ அன்புமகளே !

-Siva

பணி சுமையால் என் மகளை 
வாரயிறுதியில் மட்டும் பார்க்க முடிகிறது .இந்த பிரிவாற்றாமையால் நான் எழுதய கவிதை இது.

No comments:

Post a Comment