Friday, January 31, 2014

எதிர்கால உலகம்

வேதியல் மாற்றமோ, வெங்காய மாற்றமோ, 
வேட்டையாடி வந்தவங்க,வேற மாதிரி ஆனாங்க!
எண்ணிலடங்கா உயிர்கள், மண்ணுக்குள் மடிந்து 
எண்ணெயா வந்தத, என்ன தான் செஞ்சாங்க?
எல்லாத்தையும் எரித்துவிட்டு,எதிர்கால சந்ததிக்கு
எங்க தோண்டினாலும்,பிலாஸ்டிக்க பரிசளிச்சாங்க!
ஆத்துக்கு நடுவுல,அனைகட்டி வந்த நீராகரத்த
அடுக்குமாடிய கட்டி, அப்பட்டமா அழிச்சிட்டாங்க!
குழாய் அடியில,குடத்த வச்சி காத்திருந்தா
குப்பை நீரயெல்ல்லாம்,குடிநீரா கொடுத்தாங்க!
பஞ்சு வெடிச்சி,பறந்து சென்ற காற்றையெல்லாம்
நஞ்சு கலந்து,நாசமாக்கி விட்டாங்க!
விருந்து வச்சி ,விதவிதமா உண்டதயெல்லாம்
மருந்து வச்சி, மட்டமாக மாத்திட்டாங்க!
காலம் கொஞ்சம் கடந்து,கண்முழிச்சி பார்த்தா
காலாழாக்கு அரிசிக்காக,கால்கடுக்க நடப்பாங்க!
செத்த உயிர்கள் இங்கே, சிறு எண்ணிக்கை தானென்று
செவ்வா கிரஹத்திலும், செயற்கைகோள் அனுப்பிட்டாங்க!
-Siva



Tuesday, January 28, 2014

வாழ்க்கை-பாலம்

போக்குவரத்து நெரிசலில, போகுறது சுலபமில்ல,
ஏழையென்றும் பணக்காரனென்றும் பாகுபாடுமில்ல,
ஏறி சென்றவனுக்கெல்லாம்,ஏற்றம் என்று எதுவுமில்ல!
வளைகிற போது வளைஞ்சா, விபத்தென்று விதியுமில்ல!
எத்தன பாரம் சுமந்தாலும்,எனக்கொன்றும் கவலையில்ல! 
முழுமை பெறாம நானிருந்தா,முள்ளுகம்பி நீட்டுமில்ல!
உடஞ்சு போய் நானின்னா,உனக்கென்றும் நேர்வழியில்ல!
ஏறியவன் இறங்குவதையும், இறங்கியவன் ஏறுவதையு
ம்,
எட்டிநின்னு பாக்குறது எனக்கொன்னும் புதுசுமில்ல!
என்னடியில நிழழிருந்தும், எளப்பார எவனுக்கும் நேரமில்ல!
என்னப்போல வாழ்க்கையிருந்தும், எனக்கொரு வாழ்க்கையில்ல!
-Siva

Sunday, January 26, 2014

தூங்கும் விழிகளில் துயரம்..

சங்க தமிழன்று செழித்த நாடுடா,
தங்க தமிழின்று தளரந்தது ஏனடா?
அங்கம் அனைத்திலும் ஆங்கிலமேனடா?
பங்கம் பறக்க படையெடுக்காதது ஏனடா?
ஏங்கும் எந்தமிழுக்கு ஏற்றம் எப்போதடா?
தூங்கும் விழிகளுக்கு துயரமேனடா?
சிங்கம் நீ சீறீயெழுந்தால் மானிடா,
மங்கும் மாதமிழ் மண்ணில் வாழுமடா!
-Siva

Friday, January 24, 2014

விரக்தி

புயலென இருந்தால்,புழுதியோடு போயிருப்பேன்!
முயலென இருந்தால்,மூன்றாண்டில் முடிந்திருப்பேன்!
அரவமென இருந்தால், அடிபட்டேனும் அழிந்திருப்பேன்!
திரவமென இருந்தால், திருக்கும்போதே தீர்ந்திருப்பேன்!
ஈயென இருந்தால், ஓர்இரவிலே இறந்திருப்பேன்!
தீயென இருந்தால், தண்ணீரால் தணிந்திருப்பேன்!
பனித்துளியாக இருந்தால்,பகலவனால் பறிக்கபட்டிருப்பேன்!
மனிதனாக பிறந்ததால், மண்புகும் நாள்அறியேனே!


-Siva

Sunday, January 12, 2014

பொங்கல் வாழ்த்து

ஆறு செங்கல அடுக்கி வச்சி,
அரச்ச சந்தனத்த அதில் பூசி,
அடுப்பாக அதை அனல் மூட்டி,
ஆழாக்கு அரிசியும், அச்சு வெல்லம் போட்டு, 
ஆக்கி வச்ச பொங்கல் இன்று பொங்குதே! 
ஆத்தூர் குயவனின் மண்பானையும்,
அறுத்துவச்ச செங்கரும்பும் இன்று 
அன்னமிட்ட உழவனுக்கு நன்றி சொல்ல  !
அகர வரிசை கவிதையொன்று ,எனக்காக
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து பொழியுதே! 
-Siva 

Thursday, January 2, 2014

நாத்திகம்

தூணிலே இருந்துக்கொண்டு,துண்டாக வீழ்வதென்ன?
துரும்பிலே இருந்துக்கொண்டு , தாலிலே துளைப்பதென்ன?
கண்ணுக்கு தெரியாமல் இருந்து, கண்ணாமூச்சி ஆட்டமென்ன?
கருவறையில் காட்சி தந்து, கருவையே அழிப்பதென்ன?
ஆயுதங்கள் ஆயிரம் ஏந்தி, அநியாயங்கள் புரிவதென்ன?
பாவங்களை போக்க பிறந்து, குறிதியினை கேட்பதென்ன?
வேதங்கள் பல இருந்தும், வெற்றிடமாய் போனதென்ன?
நம்பிக்கை உன்மேல் வைத்து,இனிமேல் ஆவதென்ன?
-சிவா 

Wednesday, January 1, 2014

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2014

காலஅன்னை கருவிலே,
கடவுளின் உருவிலே, 
பேருகாலம் பன்னிரெண்டாக,
பெற்றெடுத்தாள் புத்தாண்டாக! 
-Siva