Wednesday, June 25, 2014

மடிக்கணினியில் மல்லிகை பூந்தோட்டம்

மல்லிகை பூந்தோட்டத்தை
மடிக்கணினியில் பார்க்கிறோம்,
மனம் வரவில்லை யென்று,
மனதுக்குள் வேர்க்கிறோம்!
துல்லிய ஒளி கேட்டாலும்,
தெள்ளிய காட்சி யானாலும்,
தொட்டுப்பார்கக ஏங்கினோம்!
மெல்லிய சோகம் ஆனாலும்,
மறுமுனை அறியுமென்று
மறைத்து வைத்து தாங்கினோம்!

காய்ச்சலுல எம் கண்கள்
கண்டபடி சிவந்திருக்கும்,
காணொளியில் கேட்கும்போது,
கண் தூக்கம் இல்லையென்று
கள்ளக் காரணம் சொல்லிடுவோம்!
பரதேசம் பற்றி கேட்டால் மட்டும்,
பிரதேசம் இதை போலில்லையென
பொய்யாக புகழாரம் சூட்டுவோம்,
பிரிவு துயர் வேதனயை எங்கள்,
புறமுதுகில் ஒளித்திடுவோம்!

மதிய உணவு என்னவென்று
அதிகாலையில் கேட்டிடுவோம்,
மீன் குழம்பென்று சொல்லிவிட்டால்
ஏன் இங்கே வந்தோமென்று
எண்ணி எண்ணி ஏங்கிடுவோம்!!
முன்னின்று நடத்தவேண்டிய
மாமன் மகன் மனவிழாவை,
முகநூலில் மட்டும் பார்த்திடுவோம்!
கெட்ட செய்தி ஏதும் வந்தால்,
கிட்ட  இல்லாமல் போனோமென்று
கண்கள் மட்டும் கலங்கிடுவோம்!

சிந்திய ரத்‌தம் உறைந்து
சொந்த தேசம் திரும்பிடுவோம்,
வந்து சேர்த்ததும் ஒருக்கூட்டம்
பந்தா பண்ணுகிறான் பாரென்று,
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும்!
பந்த பாசத்த அடகுவச்சி, எங்கள்
பையில கொஞ்சம் பணமிருக்கும்,
நொந்து போன எங்க நெஞ்சுக்குள்ள,
நூறுகோடி ரனம் இருக்கும்!
கணக்குப் போட்டு பார்த்தா,
நாங்கள் இழந்தது இமயமென்று,
இளம்பிள்ளைக்கு கூட புரியும்!

-Siva

அமைதி தேசத்து அரசன்

அமைதி தேசத்து அரசன் நீ,
மூன்று தமிழில் மூத்தவன் நீ,
சுயநலமில்லா சுந்தரன் நீ,
சோர்ந்து நான் போகமல்,
சேர்ந்து விளையாடும் நண்பன் நீ,
தியாகம் என்ற மகுடத்தை,
தலையில் சூடிய மன்னன் நீ,
தீயாக காத்து என்றும், ஒரு
தாயாக ஆன அண்ணன் நீ!

ரொட்டி துண்ட உன் பாதையில
கொட்டி கொண்டு நீ நடந்த,
குட்டி எறும்பைப் போலே நானும்
கெட்டியாக பின் தொடர்ந்தேன்,
கூட்டி போன தூரத்தை
எட்டி நானும் பார்க்கையில,
எட்டி பிடிக்க முடியா உயரமென்று,
தட்டி கொடுத்தேன்,உன் தோள்மேல!!

உன் வெற்றி பாதையில்,
வலம் வரும் தேர் நான்
என் வெற்றி மாலையில்,
ஒளிந்திற்கும் நார் நீ !
சாம்பலாகி நான் சரிந்தபோது,
ஆம்பலாக்கி் பூக்க செய்தாய்!
தம்பி கைமீது,நம்பிக்கை வைத்து
தன்னமிக்கை ஊட்டினாய்!
திறமைசாலி நானென்று ,
திக்கெட்டும் முழங்க செய்தாய்!

எந்த தேசம் நீ சென்றபோதும்,
என் நேசம் அங்கிருக்கும்,
என் சுவாசம் நின்றபோதும்,
உயிரினில் உன் பங்கிருக்கும்!
பாண்டவரின் புகழை பாட,
பழைய பாரதம் இருப்பதைப்போல்,
நம் புகழை நாளும் பாட,
நாளைய பாரதம் காத்திருக்கும்!
விமானம் ஏறி விரைந்து வா,என்
வின்மீன்கள் உனக்காக பூத்திருக்கும்!

-Siva

பெண் காதல்

கதைகளில் படித்த காதலை,என்
கண் முன்னே காட்டினாய்,
புதிதாய் துடித்த என் இதயத்தை,
பூவுக்குள் வைத்து பூட்டினாய்!
நினைத்து நினைத்து பார்த்து,என்
நிழலுக்கும் வெட்கத்தை ஊட்டினாய்!
மைவிழி பார்வையில் மையல் கொண்டு,
மழையாக மனதினில் ஊற்றினாய் !

நாசி புகும் சிறு தூசியுமறியும்,
என் தும்மல், உன்னை நினைத்தே!
கூந்தல் கலைக்கும் காற்றும் அறியும்,
கைகோதி நான் சரிசெய்வது,
உன் கவனத்தை ஈர்க்கவே!
நிலம் பார்த்து நான் நடப்பது,
வான் நிலவும் கூட அறியும்,
நீ என்னை பார்க்க வேண்டியே!

ஒரு மணி நேர ஒப்பனையெல்லாம் ,
ஓரக்கண் கொண்டு பார்க்காமல்,
ஒழுக்கமானவன் போல் நடிப்பாய்!
ஆடையின் இடைவெளி போதுமென்று,
அருகினில் நெருங்கி அமர்ந்தால்,
தெரியாமல் செய்த பிழையென்று,
தள்ளி சென்று மன்னிப்பும கேட்பாய்!

பாறாங்கல் பாரமா, உன்னை
பார்க்காத இதயம் கனக்கும்,
பார்த்து நீ போனாலே,
பசும்புல்லா எடை இழக்கும்!
பாசக்காயிற எனக்குள்ள வீசுவாய்,
காதல் காலன் நானென்று சொல்வாய்,
பாதியில விட்டு போய் உசுரோட கொல்வாய்!

இரண்டு நிமிடம் நீ பேசியதை,
இரவுமுழுவதும் இமைமூடாமல்,
இதயதுக்குள்ள எழுதி பார்ப்பேன்!
பகல் வேலை வந்த பின்பும்,
பைத்தியம் போல் அதையே
நானும் சொல்லி தீர்ப்பேன்!

பூ விரி்ந்தும் தெரியாத வண்டுப் போல்,
புரிந்தும் புரியாத மண்டுப் போல்,
உன்னை சுற்றி சுற்றி பார்த்திருப்பேன் ,
எப்போது புரியும் என் வலியென்று,
முப்பொழுதும் உனக்காக காத்திருப்பேன்!!

-Siva

Saturday, June 7, 2014

கனவு

ஏறாத மலையேறி ,
எட்டாத உயரத்தை 
எட்டி நாம் பிடித்தாலும்,
அங்கோர் எறும்பு கூட்டம்
அதன் உணவை எடுத்து செல்லும்,
நம் கனவையும் கெடுத்து செல்லும்,
என்னை மிஞ்ச முடியாதென்று
ஏளனமாய் சொல்லி செல்லும் !!

உணவின் தேடலும்,
கனவின் தேடலும் ஒன்றல்ல,
அவமானத்தால் நம் தலை
குனிவதும் நன்றல்ல!
உணவின் தேடலெல்லாம்,
கையிலிருந்து வயிர் வரை ,
கனவின் தேடலெல்லாம்,
காலத்திற்கும் உயிர் வரை!

உணவின் சுவையை நாவறியும்,
கனவின் சுவயை யாரறிவார்?
முயற்சி செய்பவர் மட்டும் அறிவார்,
முழுமதி போல் உணர்வார்,
விழுதலும் ,அழுதலும்
எழுதலுக்கே என்பார்!

காசிற்காக ஒடும் ஒட்டமெல்லாம்,
மேககூட்டம் போலாகும்,
நிலையாக ஓரிடத்தில் நில்லாது
மழையாக மண்ணில் விழும்!
கனவிற்காக ஒடும் ஓட்டமெல்லாம்,
காற்றோட்டம் போலாகும்,
கதவடைத்து போனாலும் ,
சாவித்துவார இடைவெளியில்,
சளைக்காமல் மீண்டு எழும்!

கனவை சுமக்கும் கண்களுக்கு ,
கண்ணீர் என்றும் வராது!
உணவை சுமக்கும் எறும்புகள் ,
உச்சி போய் என்றும் சேராது ,
கனவின் ஓட்டத்தில் சிக்கி,
கண்டிப்பா உயிர் வாழாது!

-Siva

லஞ்சம்

தென்றலுக்கு தேநீர் விருந்து வைப்பேன்,என் 
தேகத்தை மட்டும் தீண்டி போக!

மலர்களுக்கு மரியாதை செய்வேன் ,
இதழ் தேனை எனக்கு தர !

பனித்துளிக்கு பெருந்தொகை தருவேன்,என்
பக்கத்தில் வந்து விளையாட !

மேசையடியில் மேகத்திற்கு காசு கொடுப்பேன்,
மும்மாரி மழை மண்ணில் வர!

காவிரியாறுக்கு கையூட்டு வழங்குவேன்,
கர்நாடகம் விட்டு வர!

தாஸ்மாக்கிற்கு சரக்கு வாங்கி தருவேன்,
தமிழகம் விட்டுப் போக !

அந்த ஆண்டவனுக்கே அன்பளிப்பு தருவேன்,
லஞ்சத்திற்கு நஞ்சு கொடுக்க!!!
-Siva

காதலியின் கேள்விகள்

அவளை போல் ஒரு அழகியை 
அருகினில் காட்ட சொல்வாள், 
குவளை நீரை தரையில் தெளிப்பேன், 
குனித்து அவளை பார்த்திட சொல்வேன்,
ஒன்றல்ல, ஓராயிரம் அழகிகள் 
ஒனக்கு முன்னாடி என்பேன்!


நிலவை முத்தமிடிவது அவள் 
நிறைவேறாத ஆசை என்பாள்,
அவள் இதழுக்கு அவள் நெற்றி,
அருகில் இல்லை என்று,
அழகாய் நிதர்சனம் சொல்வேன்!

காதல் எப்படி இருக்கும் என்று
காதினில் செல்லமாய் கேட்பாள்,
தவழும் நம் பிள்ளை போலென்று
தயங்காமல் சொல்வேன்!

உயிரை விடுவது என்றால்
உண்மையில் என்ன என்று கேட்பாள்,
ஊருக்கு உன்னை கூட்டி சென்று
உன் வீட்டில் விடுவது என்பேன்!!!!

நான் இல்லாத வாழ்க்கை ,
எப்படி இருக்கும் என
நயம்பட கேட்பது போலென்னுவாள்,
கண்ணுக்கு தெரியாத தூசி,
கண்ணுக்குள் புகுந்து ,
கண்ணையே உறுத்துவது போல,
காலம் முழுவதும் அழ வைக்கும் என்பேன்!!

-Siva

புகை


நெருப்பையும் பஞ்சையும்
நெறுக்கி செஞ்ச,
காகித பீரங்கியில
நெஞ்சத்த சுட்டாலே,
புரியாத உணர்ச்சிlயிலே,
புத்துணர்ச்சி பொங்குமே!

செந்தழலை பற்ற வைத்து, 
வெண்குழலில் சுற்ற வைத்து,
செவ்விதழை கடக்கும் புகை ,
நுரையீரலில் புற்று வைக்கும்,உன்
வாழ்க்கைக்கும் முற்று வைக்கும் !

விரல் இடையில் பிடிப்பதற்கு
மையூற்றிய பேனா இருக்கு !
விலை கொடுத்து நோயை
வாங்குவதும் எதற்க்கு?
காலத்தை போக்க
கை நிறைய வாய்ப்பிருக்கு,
கைகூப்பி காலனை
அழைப்பதுவும் எதற்கு?

நாகரிகம் என்ற போர்வைக்குள்
நல்ல பாம்பு ஒளிஞ்சிருக்கு!
கை வைத்து பார்த்தவனுக்கெல்லாம்
கைலாயம் காத்திருக்கு!!!
-Siva

பிறந்தநாள் வாழ்த்து

காவி துறவறம் செல்லவில்லை ,
கடும் தவமும் செய்யவில்லை , 
காதில் கேட்கும் ஸ்வரமா, 
எப்படி கிடைத்தாய் வரமா?
கண்டிப்பா குழம்பிடுவான்
அந்த பரலோகத்து பிரம்மா!!! 
-Siva


விவசாயி

உழுது படியளக்கும் விவசாயி 
பழுது பட்டுப்போனோம் சருகாகி,
பொழுது மூன்றிலும் தரிசாகி,
அழுது வேண்டுறோம்,இறைவா 
உன் செவிசாயி! 

ஏரோடு என் கைகள் இணைந்திருந்தா,
சேறோடு என் கால்கள் சேர்ந்திருந்தா,
சந்தோஷ காட்டாரு ஒன்னு ,கறைத்தாண்டி
செல்லுதே காணாத நெஞிக்குள்ள!
கதிறடிக்கும் சத்தம் எங்கள்
காதிற்க்கு ஸ்வரமாச்சி!
முத்திபோன புல்லின் வாசம்,எங்கள்
மூச்சிக் காற்றில் சுகந்தமாச்சி!
வாடிய பயிரைக் கண்டால் மட்டும்,
வாழ்க்கை போனது போலாச்சி!

சில நேரம் வின்னும் ,
பல நேரம் மின்னும்
சதி திட்டம் போடுமே!
அறுவடை மாதத்திற்குள்
கருவழிஞ்சி போகுமெ !
கண்டும் காணாமல் அரசு
கண்ணாமூச்சி ஆடுமே!
வாங்கிய கடனுக்கு மட்டும்
விளைச்சல் இங்கு வந்தா,
நாண்டுகிட்டு சாவதுதான்
நல்ல வழி கந்தா!

-Siva

வெயிலில் மழை

வெயிலில் வந்த ஒரு மழை,
தேகத்தை குளிரூட்டும்
துயிலில் வந்த ஒரு கனா,என்
தேவதைய நினைவூட்டும்!
சதுப்புநில பறவைப்போல்
சிறகடித்து மனம் பறக்கும்!
சாறுப் பிழிந்த செங்கரும்பாக
உன்னுள் சிக்கி உயிர்த்துடிக்கும்!

சிகப்பு விளக்கு போட்டும் ,என்
சிந்தனைப் போக்குவரத்து
உன்னை கடந்து போகும்,
வேகத்தடை பல இருந்தும்,
என்னிதைய வாகனம் ,உன்னில்
குதித்து உயிர் நோகும்!

நெடுஞ்சாலை பயனம் கூட,
நெஞ்சுக்குள் உனை நினைத்தால்
பூஞ்சோலை போலாகும்!
மைல்கல் எழுத்தெல்லாம்,
வழியில் நான் பார்க்கையில,உன்
மையிட்ட விழிப்போலாகும்!
உசர்ஏறி நீ ,உச்சியில ஊர்ந்து வந்தா,
சிறுசேரியும் கூட சொர்கபூமியாகும்!
-Siva