Thursday, December 26, 2013

அம்மா!!!!!!!!!!

எல்லை சாமி அருளாக,காரிருள் நிலவாக 
எம்புள்ளையா பொறந்தாயினு பூரிச்சீங்க! 
எத்தனை மணிக்கு என்வாயிறு பசிக்குமுன்னு
எனக்கே தெரியாமா கண்டுபிடிச்சீங்க!
எதேர்ச்சயாய் என் கால்கள் எடரி விழுந்தா
எறகிழந்த பறவையாத் துடிச்சீங்க!
எட்டாவது படிக்கையிலே, எதையோ போட்டு உடைக்கையிலே
எம்மகன் விஞ்ஞானினு சொன்னீங்க!
எவர் மேலோ உள்ள கோபத்த, எரிமலையா காட்ட 
எதிர்த்து பேசாம என் ஏசலையும் ரசிச்சீங்க! 
எதிர்வீட்டு பந்தியில,எலையில வச்ச பலகாரத்த
எனக்காக முந்தியில மறச்சீங்க!
எந்திரிக்க முடியாம, காச்சலுல நான் படுத்தா
என்னருகே செவிலியா இருந்தீங்க ! 
என்னத்த சொல்ல அந்த எமப்பய வந்து நின்னா
எங்கம்மா பாசக்கயிறு எனக்குதான்னு எடுத்துரைப்பேங்க!
எழவெடுத்தவன் கேட்க்க மறுத்தா
எட்டி நானும் உதைப்பேனுங்க!

-Siva

Tuesday, December 17, 2013

மெட்டுக்கு பாட்டு -3

காதலே,உயிர் காதலே
என்னுள்ளே வீசினாய்,X-கதிராய்(X-RAY)
காதலே,உயிர் காதலே
எலும்பை மட்டும் விட்டு,
எங்கோ போனதென்ன ?

மனசுக்குள்  தயக்கம் , நில நடுக்கம்
மெழுகாய் அது உருகுதா?
கண் விழித்து பார்த்தா,அவ சிரிச்சா
காற்றில் வாசம் வீசுதா?
அவள் இதழ்கள், இச் என்றால்
ஆஹா அது சொர்கம்!
அசைவற்று,அவை இருந்தால்
ஐயோ அது நரகம்!
அவள் கண்கள், பென்டுலமா
அவை ஆசையும் பொழுது விடியும் என் பொழுது!
வஞ்சி கூந்தல்,வள்ளுவன் வரிகளா
இரண்டடியிலும் இதயம் திருடி போகுதே!

காதலின் நினைவுகளால்....
காகித மலருக்குள்ளும் தேனா ?
கையில் அள்ளி எடுக்க காயமா?
சரியா இது சரியா?
நினைவுக்குள் நெறுஞ்சி சரியா ?

கை கோர்த்து செல்லும் போது
காதருகே  காற்று சொன்னதென்ன ?
உந்தன் தோளில் சாய , உன் மடியிலே தூங்க
ஏங்கினேன் கண்கள் வீங்கினேன்!
உன்னால் இரு ஜென்மம் வாங்கினேன் !

-Siva

Monday, December 2, 2013

மங்கல்யானும் மதயானையும் ..

மகள் அருகே இருந்தால்,மனமது
மங்கல்யானையும் மிஞ்சுது!
மலர் இவள் பிரிந்து சென்றால், இரவது
மதயானையாய் அலறுது !
மார்பிலே இவள் உறங்க ,நிலவது
மார்கழி பனியாய் உருகுது !
மகுடமாய் இவளை தலையில் சுமக்க,மழையது
மத்தாப்பாய் என்மேல்  தூவுது !
மாலை நேரம் வந்தால்,என் உயிரது
மழலை முகம் காண ஏங்குது !
மற்ற வேலை செய்யாமல்,உன் நினைவது
மதி இழக்க செய்யுது!
-siva