Thursday, December 17, 2015

மெல்லூஞ்சல் ஆட்டம்

மகரந்த தேன் உண்டு,
மதிமயங்கிய இளம் வண்டு,
இளைப்பார ஓரிடம் கண்டு,
மெல்லூஞ்சலில் இதமாய் ஆடியது!

அமிலம் ஊற்றிய இரும்பாக
கால நேரம் கரைய,
சீனியில் சிக்கிய எறும்பாக
பணிகள் பனிப்போல் உறைய,
சொர்க்கம் இதுவென பாடியது!

கழிந்த காலங்களோடு கடைசியில்
தானும் ஒழிந்த சேதி யறிந்து,
அது ஆடியது ஊஞ்சல் அல்ல
சிலந்தியின் வலையென வாடியது!

-Siva

Friday, October 16, 2015

மத மாற்றம்

மேஷம்  ஒன்று,
தன் பிறவி மோசமென்று ,
தனக்குள் தானே கூறியது !
ஐய்யனார் கோவிலிலே
தலை இழந்த காரணதினலே ,
மெய்யன் யாரென தேடி,
மசூதியிலே மதம் மாறியது!
குர்பானியில் கூரு போட்டபின்,
குற்றுயிரோடு கிருத்துவம் பேசியது!
மார்கழி (டிசம்பர்) மாதத்தில்,
மதிய உணவாய் போனப்பின் தான்
மதி இழந்த சேதி அறிந்தது!!
மதம் மாறி போவதினால்,
மாற்றம் ஒன்றும் இல்லையே
பரம்பொருளை அறிந்துகொள்ள,
மதம் என்றும் தொல்லையே!
-Siva

Wednesday, August 26, 2015

ஹைக்கூ

சலூனில் காத்திருப்பதும்,
பலூனில் காத்திருப்பதும்,
எவ்வளவு நேரம் என்பதை,
யாராலும் கணிக்க முடியாது!!
-Siva

சிறை வாசம்

நாளை முதல்!
பாமரன் சிரத்திற்கு சிறை வாசம்,
காவலன் கரத்திற்கு சில்லரை வாசம்!!

-Siva

காலத்தால் அழியா கலாம்

கட்டுமரக்காரன் கைகளில் ,
கடவுள் தந்த
கலங்கரைவிளக்கம் நீ !
எட்டு திக்கு தேடினாலும் ,
எட்டா புகழுடைய
எளியவன் நீ !


நரைநீள் முடியோடு ,
பிரைவாழ் வானம்போல்
கனவுகளை கானச் சொல்லி ,
இளைஞர்களின் இதயத்தின்
திரைதாழ் திறந்தவன் நீ !

அக்னியின் சிறகுகளில் அன்று ,
ஆகாசத்தில் பறந்தாய் ,
அடுத்தொரு உலகத்தை
ஆராய்ந்து பார்க்க இன்று ,
ஆவலோடு இறந்தனையோ !

சொற்பொழிவு உனக்கு என்றும்
பிடித்த ஒன்று தான் ,உன்
முன்னுரையை முடிவுரையாய்
முடித்த தினமும் இன்று தான் !
உறங்காமல் உன் இருகண்கள்
கண்ட கனவை எல்லாம் ,
இருநூறு கோடி விழிகள்
சேர்ந்து இனி காணும் !

கலங்காமல் போய்வா
காலத்தால் அழியா கலாமே!
-Siva

Wednesday, April 29, 2015

புறை ஏறினால்

புறை ஏறினால் யாரோ
  நினைகிறார்கள் என்றால், 
முறையல்ல என சொல்லும் 
  பகுத்தறிவாளன் நான்! 
உண்மை அது என்றால்,
முடிவில்லாமல்  உனக்கு  புறையேறும் ,
நொடியெல்லாம் உனை நினைப்பதால்!! 
-Siva

Sunday, March 22, 2015

கவியீர்ப்பு விசை

கவியீர்ப்பின் விசை குறைந்து,
வார்த்தைகளை தேடி நான்
காத்திருந்த நாட்கள் உன்டு.
உன்னை பற்றி கவி எழுத,
புவிஈர்ப்பு விசையில் வார்த்தைகள்
தன்னாலே சிந்தையில் விழுவதுன்டு! 


பாவைகள் பல நூறு விளையாட
உனக்காக காத்திருக்கும்,
தேவைகள் அவை இல்லையென்று
என் தோள்களில் ஆட துடித்திடுவாய்,
உயிரற்ற பொம்மைகலெல்லாம்,
பொறாமைகளாய் என் மீது
உருமாற பார்ப்பதுன்டு !

கனத்த சரீரம் என்று
கண்கலங்கிய காலம் உன்டு .
கழுத்தை நீ சுற்றி கொண்டு
வயிற்றில் போடும் ஆட்டம் கண்டு,
வரம் வாங்கிய உடம்பி்து
உனக்காக என நினைப்பதுன்டு !

கண்ணாடி முன் நின்று
ஒப்பனைகள் நான் செய்தால்,
அப்படியே நீயும் செய்வாய்,
பின்னாடி நிற்பது பிள்ளையா?
பனிதுளியின் மேல் ஒரு
பிழையான பிம்பமா என ,
அடிக்கடி நானும் குழம்பியதுன்டு!

ஆனா ஆவன்னா நீ சொல்ல,
தேனாய் காதினில் அது செல்ல,
பள்ளிக்கூடம் செல்லாமல் நீ
சொல்லும் பாடம் கண்டு,
கற்பூரம் உன் புத்தியென்று
கர்வம் கொண்ட நேரமுண்டு!

இரண்டு அகவைக்குள் நீ
செய்தது மாயம் என்றால்,
உருண்டோடும் வருடத்தில்,
கரை புரண்டோடும் இன்பங்களை
கண்முன்னே கான,
காலயந்திரத்தை கொஞ்சம்,
பின்னோக்கி திருப்ப
நெஞ்சம் நிறைய ஆசையுன்டு!!
-Siva

Monday, February 23, 2015

சாதீ

நாலாக வகுத்தானே ஆதியில,
ஆலாக வளர்ந்திருக்கு வீதியில! 
விழுதுகளை பிடித்து ஓர் கூட்டம்,
விடமால் போடுதே பேராட்டம்,
அழுது நாங்க தீர்த்த பின்னே,
ஓயலையே உரிமை போராட்டம்!
ஆலையம் தொழுவது,
சாலவும் நன்றுதான்.
வாசலில் மட்டும் எங்களை ,
வாசம் செய்ய வைப்பதால் ,
ஆயுலுக்கும் நாத்திகராய்
இருப்பதும் ஒன்றுதான்!!
தவித்த வாய்க்கு தண்ணீர் ,
தரணி அறிந்த தர்மம் தான்!
தனி குவளையில் தண்ணீர் ,
என்றும் கவலையில் கண்ணீர்,
எங்களின் தனியாத கர்மம் தான் !
ஓடி விளயாடிய நண்பனிடம்,
ஓரளவும் சாதி இல்லை!
ஓய்வெடுத்த அவன் இல்லத்தில் ,
ஒதுக்கிவைத்த பெற்றோரின்
ஓரவஞ்சனையை கேள்வி கேட்க,
ஒருவருக்கும் நாதி இல்லை!
கண்ணும் கண்ணும் மோதி,
கைவிரலால் தலை கோதி,
சொன்னாள் காதல் சேதி,
அவள் உறவினர் கைகளில் சாதி,
கடைசியில் தண்டவாளத்தில்
தலை பாதி!
சாதிகள் இல்லயடி பாப்பா,
சரியாக சொன்னானே பாரதி,
சாதிகள் இல்லை தான்,
பாப்பாகளுக்கு மட்டும் !
சான்றிதழில் அழிந்தாலும் சாதி,
சான்றோர் இதழில் என்றும் அழியாது,
சந்ததிகள் பல விழுங்காமல்,
சத்தியமாக அது ஒழியாது!
-Siva

காதல் இளங்குருவி

காதல் இளங்குருவி,
உசுரை மட்டும் உருவி,
நெஞ்சாங்கூடு விட்டு, 
நெடுந்தூரம் பறந்தாலே!
கண்ணில் காட்டருவி ,
அவள் விட்டு சென்ற
ஞாபக சிறகு,
கூர்வாளாய் மருவி
குத்தும் என மறந்தாலே!
துருவ பனிமலை போல, (global warming)
சில்லென காதல் இருந்ததடி,
நீ விட்டு சென்ற வெப்பமயம்,
மலையும் ஆறாய் உருகுதடி,
கண்ணீரின் கடல்மட்டம்,
கணக்கு வழக்கில்லாமல் ஏறுதடி !
ஒரு நெகிழி போல் காதல், (plastic)
நொறுங்காமல் என்னுள் இருந்ததடி ,
அதை நெருங்காமல்
நீயும் சென்றதால்,
அகழியில் இறந்து புதைந்ததடி!
மண்ணுக்குள் விழுந்தாலும்
என் காதல்,
மக்காமல் என்றும் இருக்குமடி!
ஒண்ணுக்குள் ஒன்றாய்
நாம் ஆகும் வரை,
மறக்காமல்
மறுஜென்மம் எடுக்குமடி!
-Siva

Thursday, January 22, 2015

ஜாவா கன்னி

ஜாவா கன்னியடி,
நீ ஜாவா கன்னியடி,
உன் கண்கள் எனை சாய்க்கும் 
நோவா கன்னிவெடி!
போவா இரவுகளில்
உன்னை எண்ணியடி,
பூவா என் இதயம் பின்னுதடி!
சாவா வலிகளில் காயமுற்றேன் ,
நீ-வா இன்றே என் மருந்தாகடி!
யாரும் நெருங்கா தீவா, (private)
என் காதல் என்னுள் இருந்ததடி!
ஊரும் அறியும் விதமா,(public)
உன் பெயரை உதடுகள் சொல்லுதடி!
உனை பார்க்கும் போது மட்டும்,
காற்றிலே வார்த்தை கறையுதடி(volatile)
காதலை கடத்தல் பொருள்போல, என்
கண் இமை கூட பதுக்குதடி! (protected)
முயற்சி திருவினை ஆகும் என்பார்,
முயன்றேன் பிரிவினை ஆக்கினாயடி !(try)
நடைவண்டி பழகும் பிள்ளைபோல்,
முதல் காதலை உன்னிடம் சொன்னேன்,
கண்ணாடி பிம்பம் போல் காதலை ,
கண்முன் காட்டுவாய் என பார்த்தால்.(catch)
காற்றாடி(fan) முன் காகிதம் போல, (throws )
கடைசியில் குப்பையில் வீசினாயடி! (gc)
மறதி ஆளும் முதுமையிலும்,
இறுதியா நீ பேசிய வார்த்தை, (final)
உறுதியா உள்ளத்தில் இருக்குமடி!
உறைந்து போன அந்த நொடிகளை,(static)
திறந்து பார்க்க நினைத்தால், உயிர்
இறந்தாலும் மீண்டும் இறக்குமடி!!!
-Siva

பொங்கல் வாழ்த்து

மஞ்சள் வெயிலொளி, 
மண்ணில் சேராதோ!
கொஞ்சும் குயிலொலி,
காதினில் கேளாதோ!
பஞ்சை பதுக்கிய மேககூட்டம்,
மிஞ்சும் மழையென தூவாதோ!
புஞ்சை புழுதியாய் போன நெஞ்சம்,
நஞ்சை நிலமென மாறாதோ!
எஞ்சிய எங்கள் துயர் துடைக்க,
இந்த பொங்கல் இன்று பொங்காதோ! 


-Siva

ஹைக்கூ

சேரும் சேர்கை 
சரியில்லை எனில்,
மாட்டுத் தோலுக்கும் சிறு 
மதிப்புமிலே! 
கெட்டி மேளமும், 
கெட்ட சவ மேளமும் ,
தவில்,பரையோடு
தோலின் சேர்க்கையிலே!
- Siva