Friday, February 28, 2014

ஆதாரம்

இமை இரண்டும் மூடினால்,
தூக்கம் கண்ணில் வர ஆதாரம்!
மேக கூட்டமது மூடினால்,
மழை மண்ணில் வர ஆதாரம்!
விதை பூமிக்குள் மூடினால்,
விருட்சம் வர ஆதாரம் !
உறவுகள் உன்னை மூடினால் ,
தனிமை வர ஆதாரம் !
நெஞ்சம் அவளை  மூடினால்,
நேசம் வர ஆதாரம் !
நம்-கை பிறர் தோள் மூடினால்,
நட்பு வர ஆதாரம்!
உடை வாளை உரை மூடினால்,
கருணை வர ஆதாரம்!
ஆயுதம் அனைத்தும் மூடினால்,
உலகில் அமைதி வர ஆதாரம்!
வாய்ப்பு கதவுகள் மூடினால் ,
வெற்றி உன் கையில் வர ஆதாரம்!
-Siva

இதயம்

நாலு சுவரு இருக்குது ,
நல்லது கெட்டது தெரியுது!
பாவம் ஒன்ன பாத்துட்டா,
விழி அணை உடையும் முன்னே ,
பதறிபோய் துடிக்குது!
குத்தம் ஒன்ன செஞ்சிட்டா ,
கூனி குருகி நிக்குது!
தலைவி முகத்த பாத்துபுட்டா,
தன்னால தண்டோரா போடுது!
காதல் என்று வந்துட்டா ,
கூடு விட்டு கூடு பாஞ்சி
குதூகலமா இருக்குது !
பிரியமானவ பிரிஞ்சிப்போன,
பாரம் ஏத்தி கணக்குது!
ஈரம் கொஞ்சம் வத்திப்போன ,
இருக்கானு சந்தேகம் எழுப்புது!
ஆடும் ஆட்டம் நின்னுபுட்டா ,
அடக்கமாகி போகுது !
-Siva

Thursday, February 27, 2014

கண்ணறியா காதல்

உருவம்தெரியா  தேவதையை ,
உள்ளூர பார்க்கிறேன்
பருவம் நான்கிலும்,
பனி மோதி வேற்க்கிறேன்!

வழிகின்ற  அவள் கண்ணீர, என்
விழிகள் என்றும் பார்த்ததில்ல!
பார்க்காம இருந்தாலும் நெஞ்சம்,
பதை பதைக்க தவறவில்ல!

கருப்பு தான் காட்சி என்றாலும், உன்
கைபிடித்து போகும் போது,அனல்
நெருப்பா நெஞ்சம் எரியுதடி!
பயணம் அது முடிந்தாலும் , உன்
பத்துவிரலை சிறை பிடிக்க,என்
கைரெண்டும் காவல் இருக்குதடி!

ஒளிஞ்சி வெளயாடும் கன்னத்த , என்
ஒதடு கண்டுப்பிடிக்குமடி!
முகத்தில நீ தீட்டும், ஒரு
சிவப்பு ஓவியத்த
கருப்பு திரை போட்டும்,என்
கண்ணுக்கு தெரியுதடி!

நான்கு விழிகள் குருடென்றாலும் ,
நம் காதலுக்கு என்றும் கண்ணிருக்கு,
இடறி என்றும் விழுந்திடாம, அது
இருக்கமா நம்ம பிடிச்சிருக்கு!!

-சிவா

Tuesday, February 25, 2014

வானுக்கு ஓர் உவமை

அரவம் தீண்டிய வானமோ
ஆனதென்ன நீலமோ,
நேரம் கடந்து போனதால்,
நுரைதப்பியது அந்த மேகமோ!
அழுது தீர்க்கும் மழைத்துளி,அந்த
ஆகாசத்தின் அன்னையோ!

குத்தம் என்ன செஞ்சுதோ அந்த
கண்கூசும் சூரியனு!
மலை ரெண்டு நடுவுல ,
மறஞ்சிருந்து பாக்குதோ,
மறுநாளு தப்பித்து,
மேகத்துக்குள் ஓடுததோ!

கருப்பு நிற புல்வெளியில்,
பூத்திருக்கும்  பனித்துளியோ!
வெள்ளி என்ற பேரு சொல்லி,
தள்ளி நின்னு ஜொலிக்குதோ!
காலை கதிரவன கண்டுப்புட்டா,
காணாமல் தான் போயுடுதோ!

விண்னிலே போனது யார்?அந்த
விஞ்ஞானி  டெஸ்லாவோ,
மின்சாரம ஏதும்  இல்லாம,
மின்மினி பூச்சி கூட்டம் போல ,
மின்னுவது அந்த வட்ட நிலாவோ!.

-சிவா

Friday, February 21, 2014

பியானோ ப்ரியம்

கருப்பு ராஜா நானடி,
வெள்ளை ராணி நீயடி!
உன்னருகே நான் இருப்பேன்,
உனக்காக குரல் குடுப்பேன்!
விரல் ஒன்னு உன்ன தீண்டினா
விருட்டுனு நான் எழுவேன்!
சும்மா சும்மா உன்ன தொட்டா,
சுதியேத்தி அழுதுடுவேன்!
கீழும் மேலும் அசஞ்சலும்,
கீதமாக நாம் இசைப்போம்!
குட்ட குட்ட குனிஞ்சாலும் ,
சொட்ட சொட்ட ஸ்வரம் குடுப்போம்!
கிட்டத்தட்ட நாம் பிரிஞ்சாலும்,அந்த
கீபோர்டும் வெறும்கூடோ!
-Siva

Thursday, February 20, 2014

முதிர் காதல்

உலுத்து போன உடலிலும் ,
பழுத்து போன வயதிலும்,
சலித்து போகாம சுவைக்குதே,
கொழுத்து போன நம் காதல்!

கண்ணு சரியா தெரியலைனு ,
கண்ணாடிய தேடுவேன் !
தேடிபிடிச்சி நீ தந்தா,உன்
தலையில உள்ள நரையெல்லாம்,
தெளிவா பாத்து நா ரசிப்பேன்!

ஏங்கேனு நீ அழைப்ப ,
தூங்குவது போல நா நடிப்பேன் ,
காலார நீ நடந்து ,காதருகே நீ வந்தா
கன்னத்தில செல்லகடி நா கடிப்பேன் !

கைத்தடி என்ற ஒன்றை ,எந்த
கயவன் கண்டுபுடிச்சானுனு,
கைய்ய புடிச்சி நீ கேட்ட!
அந்த ஒத்தசொல் என்ன செய்ததடி?
உள்ளம் கொள்ளையடித்து,
உன்னிடம் ஆனது கைதடி !

ஒன்னுக்குள் ஒன்னா வாழ்ந்துட்டோம்,
மண்ணுக்குள்ள போகும் போதும் ,
மறந்துக்கூட பிரிக்காம ,
இறந்து போன இரு சடலத்த,
இருக்கமா புதைக்க சொல்லுவோம்!
மறு ஜென்மம் ஒன்றிருந்தா,அதிலும்கூட
நெருக்கமா நாம் இருப்போம் !

-Siva

Wednesday, February 19, 2014

தற்கொலை

முற்றத்துல ஒரு கயிறு, உயிர் எடுக்க தொங்குதோ! 
சுற்றத்தார் சுடு சொல்லு, சுருக்குனு தான் குத்துதோ! 
ஏற்றம் உன் வாழ்க்கையில, என்றும் இனி இல்லயென
ஏறி நிற்க்கும் நாற்காளி, ஏளனமாய் சிரிக்குதோ?
மாற்றம் இனி வராதென்று,காற்றும் கதவடச்சி போகுதோ?
குற்றம் என்ன செஞ்சிட்ட,
முடிச்சிப்போட்ட கயித்தால,மூச்சை ஏன் நிறுத்தற? 
சீற்றம் கொண்டு சிதஞ்சிடும் ,
சேர்ந்தவங்க நிலமையை சிந்திக்க ஏன் மறுக்குற?
முற்றும் என்று முடித்திட,வாழ்க்கை ஒன்னும்
முழுநீள நாவல் இல்ல! 
தேற்றம் கொண்டு எழுந்து வா,அந்த தென்றலுடன் 
தேநீர் விருந்து உண்ண! 
-Siva


Monday, February 17, 2014

சிரிப்பு கவிதை

ஏக்கர் நிலத்துக்கு பன்னையாரானாலும், 
சர்க்கார் ரோட்டு பாதையில , 
Yorker வேகத்துல சீறி போனா, 
pacemaker போட்டும் பொழைக்காம,
சாக்பீஸ் markerல வட்டம் போட்டு, 
Boss Parker வண்டியில ஏறிடுவ !

lifeoda கடைசி junctionல , 
Pension வாங்கும் பெத்தவங்கள,
மனுஷனா மதிச்சி பாத்துக்கலைனா,
mention பன்ன முடியாத துன்பத்தையெல்லாம்,
tensiona நீ அனுபவிப்ப!

ரோட்டு கடை Fast fooda ,
கேட்டு கேட்டு நீ தின்னா,
fateu வசம் மாட்டிக்குவ,
rate நெறய செலவழிச்சும்,
gate pass போட்டுடுவான் அந்த ,
கேடு கெட்ட எம பைய்ய! 

Friday, February 14, 2014

காதலர் தினம்!

காவலிருக்கும் கண்ணு ரெண்டும்,
காதல் கைது செய்யாதோ?
சேவல்கொண்டை செவ்விதழ்கள்,
செல்ல சண்டை போடாதோ?
வாசித்த இருத்துளை குழலொன்று,
நாசிகள் என்றாகாதோ!
பழுத்த பழங்கள்  சேர்ந்து,
கழுத்து என்றாகாதோ!
கொழுத்த பஞ்சி மெத்தை,
கொமரி இளநெஞ்சமாகாதோ!
சல்லடை போட்டு தேடியும்,
உன் மெல்லிடை கிடைக்காதோ?
கள்ளப்பார்வை பார்த்தாய், நம்
உள்ளங்கை ரெண்டும் சேராதோ?
கடல் தாண்டி சென்றாலும்,நம்
கால்கள் கவலை கொள்ளாதோ!
கவி எழுதி காதலை சொன்னா,
செவி இரண்டும் கேளாதோ?
புரிந்தும் புரியாததை போல,அது
பாசாங்கு  செய்யாதோ!
பிள்ளை பாத வெட்கம் போதும் ,உன்
பிரியம் புரிய வைக்காதோ!!!
-Siva 

Wednesday, February 12, 2014

இன்றைய கல்வி!

கல்வி நம் கண்களை போல,
காசு இருந்தா அதில மைவிழும், 
காசில்லைனா அதில மண்விழும்!

கல்வி என்பது கடவுளை போல,
காசு இருந்தா சிறப்பு தரிசனம், 
காசில்லைனா தர்ம தரிசனம்!

கல்வி என்பது கடலை போல,
காசிருந்து மூழ்கினா முத்து , 
காசில்லாம மூழ்கினா சங்கு !

கல்வி வாழ்க்கையின் வழி தான்,
காசு இருந்தா பளிங்கு பாதை,
 காசில்லைனா பள்ளமே பாதை!

கல்வி எங்குமின்று வணிகம் தான்,
காசிருக்கிறவன் சம்பாதிக்கிரான்,
காசில்லாதவன் பாதிக்கபடுரான்!
-Siva

Tuesday, February 4, 2014

ஹைக்கூ :

இரண்டே குத்துல என் உசிர் நின்னு போச்சே,
விளையாட்டு போட்டியில்ல,விவகார சண்டயில்ல,
வேறென்ன குத்து அது, எம்மக காதுக்குத்து !
-Siva