Monday, February 23, 2015

சாதீ

நாலாக வகுத்தானே ஆதியில,
ஆலாக வளர்ந்திருக்கு வீதியில! 
விழுதுகளை பிடித்து ஓர் கூட்டம்,
விடமால் போடுதே பேராட்டம்,
அழுது நாங்க தீர்த்த பின்னே,
ஓயலையே உரிமை போராட்டம்!
ஆலையம் தொழுவது,
சாலவும் நன்றுதான்.
வாசலில் மட்டும் எங்களை ,
வாசம் செய்ய வைப்பதால் ,
ஆயுலுக்கும் நாத்திகராய்
இருப்பதும் ஒன்றுதான்!!
தவித்த வாய்க்கு தண்ணீர் ,
தரணி அறிந்த தர்மம் தான்!
தனி குவளையில் தண்ணீர் ,
என்றும் கவலையில் கண்ணீர்,
எங்களின் தனியாத கர்மம் தான் !
ஓடி விளயாடிய நண்பனிடம்,
ஓரளவும் சாதி இல்லை!
ஓய்வெடுத்த அவன் இல்லத்தில் ,
ஒதுக்கிவைத்த பெற்றோரின்
ஓரவஞ்சனையை கேள்வி கேட்க,
ஒருவருக்கும் நாதி இல்லை!
கண்ணும் கண்ணும் மோதி,
கைவிரலால் தலை கோதி,
சொன்னாள் காதல் சேதி,
அவள் உறவினர் கைகளில் சாதி,
கடைசியில் தண்டவாளத்தில்
தலை பாதி!
சாதிகள் இல்லயடி பாப்பா,
சரியாக சொன்னானே பாரதி,
சாதிகள் இல்லை தான்,
பாப்பாகளுக்கு மட்டும் !
சான்றிதழில் அழிந்தாலும் சாதி,
சான்றோர் இதழில் என்றும் அழியாது,
சந்ததிகள் பல விழுங்காமல்,
சத்தியமாக அது ஒழியாது!
-Siva

காதல் இளங்குருவி

காதல் இளங்குருவி,
உசுரை மட்டும் உருவி,
நெஞ்சாங்கூடு விட்டு, 
நெடுந்தூரம் பறந்தாலே!
கண்ணில் காட்டருவி ,
அவள் விட்டு சென்ற
ஞாபக சிறகு,
கூர்வாளாய் மருவி
குத்தும் என மறந்தாலே!
துருவ பனிமலை போல, (global warming)
சில்லென காதல் இருந்ததடி,
நீ விட்டு சென்ற வெப்பமயம்,
மலையும் ஆறாய் உருகுதடி,
கண்ணீரின் கடல்மட்டம்,
கணக்கு வழக்கில்லாமல் ஏறுதடி !
ஒரு நெகிழி போல் காதல், (plastic)
நொறுங்காமல் என்னுள் இருந்ததடி ,
அதை நெருங்காமல்
நீயும் சென்றதால்,
அகழியில் இறந்து புதைந்ததடி!
மண்ணுக்குள் விழுந்தாலும்
என் காதல்,
மக்காமல் என்றும் இருக்குமடி!
ஒண்ணுக்குள் ஒன்றாய்
நாம் ஆகும் வரை,
மறக்காமல்
மறுஜென்மம் எடுக்குமடி!
-Siva