Tuesday, December 16, 2014

குழந்தைத் தொழிலாளர்

கற்பவை கற்கும் முன்,
நின்றோம் பள்ளியை விட்டு!
அற்பவை பணம் ஆயினும், 
சென்றோம் ஆலை தொட்டு!
சொற்பவை கூழ் ஆயினும்,
தின்றோம் பாடு பட்டு!
ஏற்பவை எம் விதி என்று,
சென்றோம் கண்ணீர் விட்டு!
வலை வீசி வறுமை,
வலு போட்டு இழுக்க,
கவலையிலே மாட்டின,
குட்டி மீனு நாங்க!
விலை பேசி நாங்கள்,
விற்று விட்ட கல்வி, இப்போ
தொலைதூரம் தாங்க!
தட்டாம் பூச்சி பிடித்து,
நிறம் மாறிய கைகள்,
உளியை பிடித்து இன்று ,
உள்ளங்கை சிவப்பானதே!
பட்டம் பறக்க விட்டு,
பார்த்து ரசித்த கண்கள்,
தீப்பொறி தீண்டி தீண்டி ,
தினம் சருகாய் போனதே!
சாலையின் புழுதியை,
சந்தனமாய் பூசினோம்!
சோலையின் முட்களுடனும்,
சந்தோஷமாய் பேசினோம்!
வேலை தேடி ஆலை சென்ற,
வேதனையாய் அந்த நொடி,
பாலைவனமாய் பாழானோம்!!
- Siva

ஹைக்கூ

மழலை பருவம் மடியோடு,
முதுமை பருவம் தடியோடு, 
இளமை பருவம் குடியோடு! 
இப்படிக்கு டாஸ்மாக்!!

-Siva

Monday, December 8, 2014

வெட்டியான் சொல்றேன்

பணம் பணம் என்றொரு பயணம்,
கனம் கனமா இங்கு போகிறதே!
மனம் மனம் அதை மதிக்காமல்
இனம் மனிதயினம் செல்கிறதே!
தினம் தினம் இந்த போதயில்,
ரனம் ரனம் சென்ற பாதையில்,
பிணம் பிணமாய் இங்கு குவிகிறதே !

அதிகாரம் எனும் ஆயுதத்தால்,
அனுதினமும் அடக்கி வைத்து ,
சதிகார ஆட்டம் ஒன்னு போட்டீங்க!
விதி வசம் மாட்டிகிட்டு,
சவ ஊர்வலம் ஏறுகிட்டு,
சத்தமின்றி உறங்கும்போது ,
ஆட்டம்போட்டு உங்களை
மண்ணுக்குள் அடக்கிவைப்பேங்க!

பதினாரும் பெற்று ,
பெருவாழ்வு வாழ்ந்தீங்க !
திதி நாளு முடிஞ்சபின்னே,
கதி யாரு உங்களுக்கு ?
நதியோடு சாம்பல் போனப்பின்னே,
நாங்க தானே காவலுக்கு!

வெட்டியான் சொல்றேன்
கெட்டியா கேளுங்க,
இறந்த தேதி ஒன்றென்றால்,
கல்லறையிலே உங்க பெயரிருக்கும் .
நீங்க இரந்த தேதி பலவென்றால் (தானம்)
வரலாற்றிலும்  உங்க வாழ்விருக்கும் !

-Siva