Monday, October 28, 2013

பஞ்சு நெஞ்சில் பிரிவுத் தீ..

வெள்ளை தொட்டில் ஒன்னு, வெறுமனே ஆடுதே
பிள்ளை நிலா எங்கேனு,பிரிவாலே பாடுதே!
ரெண்டு பல் அழகிய தேடி,
உண்டுக் கழியாம வண்டுகள் வாடுதே!
மகிழ்விக்கும் பொம்மைகள் எல்லாம்,
மௌன விரதம் இருக்குதே!
ஈரம் பட ஏங்கும் போர்வை யொன்று ,
ஓரமாக சுருண்டு கெடக்க!
பேச்சு சத்தம் கேக்காம,
பூச்சுகள் ரீங்காரம் பண்ண!
என்னோட நிலயை யாரிடம் சொல்ல
இடப்பக்க இதயத்த,நீ எடுத்து செல்ல!
இசை கேட்டாலும் இமை மூடாம
திசை நான்கிலும் பாதம் திரிய,
பஞ்சு நெஞ்சில் பிரிவு தீ எறிய,
அனைக்க நீ வருவாயா இல்லை,
நினைக்க தான் விடுவாயா அன்பு மகளே!

-Siva

Tuesday, October 1, 2013

வெண்குருதி பாயட்டும் .

காதலுக்கு கண்ணில்லை என்றால்,நம்
காலம் முழுக்க குருடராய் இருப்போம்!
அமைதியின் குறியீடு வெள்ளை என்றால்,நம்
அங்கமெல்லாம் வெண்குருதி பாயட்டும் !
தூங்கி கொண்டிருப்பது தர்மம் என்றால்,அதை
ஓங்கி மிதித்து நாமும் எழுப்புவோம்!
சட்டம் ஒரு இருட்டறை என்றால்,அதன்
விட்டதில் விளக்கேற்றி ஒளிகூட்டுவோம்!
கண்ணுக்கு தெரியாதவன் கடவுள் என்றால்,அவனை
கண்டுபிடிக்க காலம் கழிக்க மாட்டோம்!
அர்த்தமற்றது மனிதநேயம் என்றால்,நம்
அகராதியில் அதனை அளகிட்டு காட்டுவோம் !
-Siva