Tuesday, November 25, 2014

பேரம்

பல்பொருள் அங்காடியில்
ஊமையாய் இருந்த வாய்,
பல்லில்லா பாட்டியிடம்
உரக்க பேசியது ,
பேரம்!!!
-Siva

குடை

கருப்பின தீண்டாமை,
கடுகளவும் குறையவில்லை,
கண்ணீரோடு வாசலில்,
குடை!!
-Siva

தனியா வாழாத எறும்பு நாங்க

தனியா வாழாத எறும்பு நாங்க,
தெய்வங்களும் வாடகை கொடுத்து,
எங்க வீட்டில் வாழ விரும்புவாங்க!

அதிகாலை சூரியன் எங்கள் வாசலிலே,
குதிகாலை எடுத்து வைக்கும் ஆசையிலே,
கள்ளதனமாய் வருமே சன்னல் வழி!
தென்றலும் தன் கதைகள் எழுத,
கதவோரம் போடுமே பிள்ளையார் சுழி!

திருமணம் எங்களால் திருவிழாவாகும்,
தெருவெல்லாம் எங்களின் புகழ் பாடும்!
அம்மா சமையலை உச்சு கொட்டி,
உண்டு முடித்ததும் சப்பு கொட்டி ,
சுண்டுவிரலை சுவைப்போம் கண்மூடி !
அப்பா எங்களை வழிநடத்த ,
தப்பா கால்கள் சென்றதில்ல!
துயரம் என்றைக்கும் வென்றதில்ல!

பக்கத்தில் உறவுகள் பூத்திருக்க,
புத்தகத்தில் படித்து தெரிந்துகொள்ள,
பிள்ளகளுக்கு உறவுகள் புதிதல்ல !
ஏக்கத்தில் அன்பைத் தேடி என்றைக்கும்,
எம்இதையம் எதிர்வீடு சென்றதில்ல!
தேக்கத்தில் கண் அனை நிறைந்தால்,
திறந்துவிட வேறொருவரை தேடியதில்ல!

புரியா ஊடல்கள் வளைத்தெங்கள்,
பாசக்கிளை என்றும் முறியாது !
பிரியும் உயிர் பிரிந்தாலும், எங்கள்
பிரியம் என்றைக்கும் பிரியாது!
-Siva

குறள் வெண்பா -2

பழிக் கண்டழும் விழியழகு ஆற்றாமல்
வெகுண்டெழும் கை கழியழகு!
-Siva
Tried kural venba after long time. This means "tear coming from eyes after seeing injustice is beautiful but the hand raised against injustice is more beautiful "


மேகம்

நாம் சேர்ந்திருந்தோம் கண்ணீரோடு,
நாம் பிரிந்துசென்றோம் விடியலோடு,
இருவருள் இருந்தது மோகமில்லை,
மேகம்!!
-Siva