Thursday, September 26, 2013

இயற்கை

தாம்பூலம் தூவிய வானிலே,தலை தூக்கி இளம்பரிதி பார்க்கையிலே!
உறைந்த பனிகள் புல்வெளியிலே,உலர்ந்து போகும் வேளையிலே!
மேகக் கூட்டம் முகம் துடைக்க 
காக கூட்டம் எல்லாம் கரைந்து கொண்டு செல்லுதம்மா!
புத்தம் புதிய பூக்களெல்லாம் தத்தம் இதழ் விரித்து சிரிக்குதம்மா!
அர்த்தம் உண்டு வாழும் வாழ்க்கை இங்கே இனிக்குதம்மா!

அதிகாரம் செய்வோம் ,ஆடவும் செய்வோம் அந்த சிலம்பாக!
கடிகாரம் முள்போல் சுழன்று காற்றையும் கிழிப்போம் கரகமாக!
உள்ளங்கை ரேகை பார்த்து சோதிடம் சொல்வோம்
இலங்கை தமிழனக்கும் இதயத்தில் இடம் குடுப்போம்!
மஞ்சள் வயல்வெளியும்,கொஞ்சும் கயல்விழியும் கண்ணில் இன்பம் காட்டுதே
தென்றலும் எங்கள் கதவோரம் தெருக்கூத்து போடுதே!
எடுத்து கொடுக்க நினைத்தால் எங்கள் கைகள் எதிரி என்றும் பார்க்காதே!
தொடுத்து வைத்த மலர்களும் இங்கே தமிழ் மனம் வீசுதே!

பாரதம் எங்கள் பாரதம் இது வெள்ளைக்கொடி ஏந்திய பூ-ரதம்!
தேரோடும் வீதியெல்லாம் தேசபற்று தெறிக்குதே !
அதில்  அசைகின்ற கொடி, அணு ஆயுதத்திற்கும் அன்பை ஊட்டுதே!
பாரதம் எங்கள் பாரதம் இது வெள்ளைக்கொடி ஏந்திய பூ-ரதம்

-Siva