Tuesday, June 25, 2013

பிரிவாற்றாமை

வாரயிறுதி ஏன் வண்டிப் பூட்டி வருது
வாராதோ விரைந்து வானிலே பறந்து !

பிற கதி என்று ஐந்து நாட்கள் கழிய
பிரகதி என்று இரு நாட்கள் இனிக்குது !

மடியில் வைத்த கணினி இன்று உன்
மழழை முகம் காட்டுதடி !

தோளிலே சுமக்கும் பை  ஒர்நாளிலேஉன்னை
தூக்கிய ஞாபகம் சொல்லுதடி !

கண்மையிலே கண்ணத்தில் வைத்த பொட்டு
உண்மையிலே என் உசிர் வாங்கி போகுதடி !

பிஞ்சி கை மூடிய பொக்கிஷம் காண
நெஞ்சமும் கொஞ்சம் அலையுதடி  !

அஹிம்சை வழி சென்ற அன்னலுக்கும் உன் 
அடி உதை அமிர்தமடி !

எதை நினைத்து சிரித்தாய் ,என்ன சொல்ல தவித்தாய்
அதையறிய கூகுலும் குழம்புதடி!

இரண்டடி குறள் சொன்ன பிரிவாற்றாமை வேண்டாம் இந்த
ஐந்தரையடி அப்பனின் குரல் கேளாயோ அன்புமகளே !

-Siva

பணி சுமையால் என் மகளை 
வாரயிறுதியில் மட்டும் பார்க்க முடிகிறது .இந்த பிரிவாற்றாமையால் நான் எழுதய கவிதை இது.

குட்டி தேவதை-குட்டி கவிதை

பத்துமாத பிரை ஒன்று 
பௌர்ணமி என்றாச்சு!

மூழ்கி கிடந்த சங்கில் 
முத்துதிரும் நாளாச்சு!

எட்டாவது அதிசயம் ஒன்னு  
என்னை எட்டி எட்டி பார்த்தாச்சு !

குளிர்விக்கும் சூரியன் ஒன்னு என்
குலத்தினில் உதயம் ஆச்சு!

குறுஞ்சிரிப்பு முகம் பார்த்து
குருஞ்சிப் பூ பூத்தாச்சு !

முதல் எழுத்து நான் தர என்
உயிரெழுத்து நீ என்றாச்சு!

கற்றது தாய்மொழி தமிழேனும்
பெற்றது பிள்ளைமொழி  
என்றாச்சு!

முத்தமிழை நான் பாடி கண்ணத்தில்
முத்த மழை பொழிஞ்சாச்சு!

குத்துவிளக்கு நீ ஒளிர நம்
குடும்பம் குதூகலம் 
ஆச்சு!

-Siva


என் குட்டி தேவதை பூமியில் (20th  மே 2013) அடிஎடுத்து வைத்த சந்தோஷத்தில் நான் எழுதிய குட்டி கவிதை .

தன்னபிக்கை

கட்டிய கூடு கலைந்தாலும் 
கவலைக் கொள்ளாதே சிறு தேனீ !

வெட்டிய மரம் சாய்ந்தாலும் 
வேரூன்றி முளைக்குமே சிறு தளிர் !

தட்டிய மேளம் தளர்ந்தாலும் 
தாளங்கள் தர அவை தவிப்பதில்லேயே !

கொட்டிய மழை தீர்ந்தாலும்
கோடையிலும் அவை வர மறப்பதில்லேயே !

ஊட்டிய அன்னையை பிள்ளை உதைத்தாலும்
உணவளிக்க அவள் மறுப்பதில்லேயே !

பூட்டிய இதழ் விரித்து இறப்பினும்
புன்முரிவல் புரிவோம் அந்த பூவாக!

வாட்டிய துன்பங்கள் வதைத்தாலும்
வாழ்வோம் வாழ்க்கை நேராக!

ஈட்டிய தோல்விகளில் இதயம் வலித்தாலும்
ஈடேறும் எண்ணங்கள் சீராக!

எட்டிய உயரங்கள் சிகரம் என்றாலும்
எழுவாய் இன்னும் வானாக!

சூட்டிய மகுடம் உன்  சுற்றத்தார் காண்பர்
சுழல்வாய் அந்த புவியாக !

-Siva 

தன்னபிக்கையை வலியுறுத்தி நான் எழுதிய முதல் கவிதை "ட்டிய" என்னும் மோனை இந்த கவிதை முழுவதிலும் பாடப்பட்டுள்ளது .

மெட்டுக்கு பாட்டு -2

என் உயிரே ,என் உயிரே (8)

உனது விழி ...
கரும் புதை குழி ..

வெறும் பார்வை பார்த்தாய்,விரும்பி அதில் விழுந்தேன்
வெளிவர மறுப்பேன் இறப்பினும்!

இரு துளை குழல்போல் சிறு நாசி இருக்க
இவள் சுவாசத்தில் தோன்றும் இன்னிசை !

கார் அருவியொன்று பொழியுது,காது அருகே
வேறொன்றும் இல்லை உன் கூந்தலே!

முழு பெறா நூல் உள்ளது முகத்தில்
அதன் காரணம் அதிலும் இரு இதழ்களே !

உனது பற்கள் ,வெள்ளை பளிங்கு கற்கள்
இதழ் விரித்து சிரித்தால் ,இவள் பூவென தோன்றும்
மலர் வண்டு வருமே வாசத்தில்!

இளவஞ்சி இவள் இதயம் திருடி
குறுஞ்சி மொட்டினுள் மறைப்பேன்

பன்னிரு பருவம் பிறகு பூத்தால்
நம்மிரு மனங்கள் அதிலென உரைப்பேன் !

-Siva

Anwar -Hindi படத்தில் வரும் "maula mera maula merai" என்ற ஹிந்தி பாடலின் மெட்டுக்கு நான் எழுதிய பாடல் வரிகள் .இது மொழி பெயர்ப்பு செய்யவில்லை என்பது இதன் சிறப்பு 

மெட்டுக்கு பாட்டு -1

[male voice....]
காற்றில்லாத க்ரஹம் நானடி
எனை மையல் கொண்ட புயல் நீயடி!

உன்னால் என் வானிலே இருசூரியன் உதிக்குதடி
பணியை போலே உருகினேன்

மின்மினி பூச்சிக்கு எதுக்கு நிலா வெளிச்சம்
மின்னல் பெண்ணே முன்னால் வா வா !

உனை பார்த்ததுமே நெஞ்சில் காயம்
கடும் பாரை நான் ,கொடி முல்லை நீ
என்னுள் உன் வேர் அதிசயம் !

[காற்றில்லாத க்ரஹம் ...]

வெட்டருவா வீச்சுதான் உன் கண்கள்
துண்டாகுதே எந்தன் நெஞ்சு

போதும் பெண்ணே இந்த கருணைக் கொலை.

யாழிசையே உனை மீட்டவா
முத்தத்தாலே எனை மீட்டு தா

[female voice....]
பல்லவி இல்லா பாட்டுக்கு இல்லையே
இசையில் என்றுமே அர்த்தம் !

அன்பு கண்ணனே அருகில் நீயில்லா
வாழ்க்கைக்கு ஏதடா அர்த்தம் !

பதநீரை போலே மாறவா
பருகிட வாதலைவா

பசி தீர பார்த்தாய் ஒரு பார்வை
அந்த அன்பால் அதிர்ந்தேன்!.

[male voice....]
விண்வெளி வசம் ஆனதே
அனிச்சம் மலர் பூக்குதே

உனை பார்த்த நொடி தெரிவது அன்னைமடி .
காலம் முழுக்க உறங்குவேன் ..

-Siva


ரஹ்மானின் கஜினி படத்தில் வரும் "khasisey mujhey tum milgayi" என்ற ஹிந்தி பாடலின் மெட்டுக்கு நான் எழுதிய பாடல் வரிகள் .இது மொழி பெயர்ப்பு செய்யவில்லை என்பது இதன் சிறப்பு 

ஈழ தமிழனின் ஏக்கக் கேள்வி

முப்பது ஆண்டுகள் நடந்தது
போர் என தெரியவில்லையா ?

அப்போது அது இனப்படுக் கொலையின்
வேர் என புரியவில்லையா ?

முளையிலே கில்லாமல் எங்கள்
மூளைச் சிதரவில்லையா ?

சகதிகள் பல கடந்து உங்கள் நாட்டுக்கு
அகதிகளாய் வரவில்லையா ?

துப்பாக்கி தோட்டாக்களை நெஞ்சில் ஏந்திய
துர்பாக்கிய சாலிகள் நாங்கள் இல்லையா?

எங்களவனின் இனத்தை இராணுவம் அழித்தும்
சிங்களவனின் ஆணவம் தீரவில்லையா ?

ஈழம் எங்களின் எதிர்காலம் என்று
பாழும் அரசியல் நடக்கவில்லையா?

காலம் கடந்து அது காலாவதியானது என
ஓலமிடும் நரிகள் அறியவில்லையா?

ஆதாரம் நூறு உண்டு அரங்கேறிய போர் குற்றதிர்க்கு
வாழ்வாதாரம் தருபவர் யார் எங்கள் சுற்றத்திர்கு !

-Siva


ஈழம் என்று பாழும் அரசியல் செய்யும் சில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள எளிய நடையில் நான் இயற்றிய கவிதை.

தில் தில் (காதல்) கவிதை

செதில் இழந்த மீனை போல் துடிக்க வைத்தாய் !

மதில் மேல் நடக்கும் சிறு நடுக்கம் கொடுத்தாய் !

பதில் தெரியா மாணவன் போல் முழிக்க வைத்தாய் !

எதில் கண் இமைத்து பார்த்தாலும் 

அதில் உன் பிம்பம் தெரியவைத்தாய் !

இதில் என்ன இத்தனை இன்பம் பெண்ணே 

சிதில் நூறு ஆனதென் இதயம் உன் முன்னே !

-Siva



தில் என்ற காதலை குறிக்கும் மோனையுடன் புனையப்பட்ட கவிதை 

தொலைந்த நினைவுகள்

கண்பேசி வந்த காதலை காணோம் இன்று 
கைபேசி(Cellphone) காதலில் தொலைந்து போனோம்!

நட்பிற்கு நாலு பக்கம் எழுதிய கடுதாசி இன்று 
ஒப்பிற்கு நாற்பது எழுத்து குறும் செய்தியாச்சி(SMS) !

மூன்று அகவை(Age) அன்னைமடி இன்று 
ஒன்னரை அகவை ஆனதடி !

பல் முலைக்கும் முன்னே
பாடம் படிக்க ஓடுதடி !

காலம் தெரியாமல் ஆடிய மைதானத்திலே
காண்பதிற்கு இனி ஒருவரும் இல்லே !

கருப்பு வெள்ளை புகைப்படம் இன்றும் பொக்கிஷமாய் பெட்டியிலே !
மெகாபிக்சல் படமோ கணினி குப்பைத் தொட்டியிலே(RecycleBin) !

இரைச்சலிடும் வானொலியில் கேட்பதெல்லாம்
எங்கள் தலைமுறை ஓலங்கலே!

கோடுவிழும் தொலைக்காட்சியில் தெரிவதெல்லாம்
நாங்கள் தொலைத்தக் காட்சிகளே !

ஐபாடு ,ஐபேடு அத்தனையும் தூக்கிப்போடு .
தொலைந்த அந்த  நினைவுகளை மீண்டும் ஒருமுறைத் தேடு !

-Siva



நான் அனுபவித்து எழுதிய கவிதை இது ...இதில் கூறப்பட்ட கருத்துகள் அனைத்தும் என்னுடைய சொந்த அனுபவம் மூலமாக எழுதப்பட்டது !

தீவிரவாதம்!

கை கால் விழுவது தீவிர-வாதம் 
ஜனநாயகத்தின் கை ஆயுதங்களின் 
காலில் விழுவது தீவிரவாதம் !
-Siva

அறிவியல் கவிதை

துருவம் இரண்டிருக்க உன் புருவம் எனை ஈர்க்கும் 
கண்கள் என்ன காந்தமா ? [Magnetic theory]

வெள்ளி வெடிப்பினால் அல்ல பெண்ணே உன் 
இதைய துடிப்பினால் தோன்றியதென்ன பிரபஞ்சமா  ? [Big Bang theory]

உன் பரிவிலே பிறந்து பிரிவிலே இறந்து 
செத்து பிழைத்தேன் இது என்ன சக்தியோ ? [Energy theory]

எண்ணை அறிய வைத்தது கணிதம் இன்று 
என்னையே அறிய வைத்தது உன் புனிதம் ! [Maths]

பூஜ்யம், ஒன்று போதும் கணினி வாழ  !
ராஜ்ஜியம் நூறு வேண்டும் கன்னி உன்னுடன் ஆல! [Computer Binary]

இதையதிற்கு காற்றை கிடத்தும் உன் இரத்தம் 
என்னையும் கூட்டி செல்லாதோ நித்தம் ![Biology Respiration]

காண்பதற்கரியப் பொருள் ஆவர்தன அட்டவனையில் உண்டு 
கன்னி இவள் கடுகிடையும் அதில் ஒன்று ! [chemistry periodic table]

புறவிசை இல்லாமலே உனைநோக்கி நகர்ந்தேன் 
தோற்றது நியூட்டன் விதி என வியந்தேன் ! [newton first law]

-Siva


ஒரு சில அறிவியல் விதிகள் எப்படி காதல் முன் வேலை செய்யாது என்பதற்கு இந்த கவிதை ஒரு எடுத்துகாட்டு

Monday, June 24, 2013

புறவழி சாலை

புறவழி சாலையிலே, அழகிய காலையிலே !
அலுவலகப் பேரூந்துகள் முந்தும் வேளையிலே!

அறவழி சொல்லி அடங்கு என்ற என் மனம் .
மறுவழி இன்றி உன்னை கண்தேடுது மறுகனம்  !

ஐம்பது பேர் கொண்ட இருக்கையடி முதலில்
காண்பது உன் இரு கையடி !


பாதி சன்னலை திறந்தாயே  என்
மீதி இன்னலை துறந்தேனே  !


மதி முகம் காட்டினாயே என்  

நிம்மதி கொஞ்சம் கூட்டினாயே !

சிறு நகை செய்தாயோ ?
சித்திரவதை  செய்தாயோ ?


மறுமுறை வேண்டினேன் சோகமாக!

மறைந்தாயே பேரூந்தில் வேகமாக!

-Siva 

இது என் வாழ்நாளில் மறக்க முடியாத காதல் கவிதை.இதை என் அலுவலக பேரூந்தும் என் மனைவியின் அலுவலக பேரூந்தும் சென்னை புறவழி சாலையில் முந்தி கொள்ளும்போது இயற்றியது .நாங்கள் இருவரும் வெவ்வேறு அலுவலகத்தில் பணியாற்றினோம் .திருமணத்திற்கு முன்பு எங்களின் சந்திப்பு இதுப்போல் தொடங்கியது .

வானில் ஒரு இன வெறியாட்டம்

வானில் ஒரு இன வெறியாட்டம் .
வென்மேகமிடித்து கண்ணீர் சிந்துது கருமேக கூட்டம் !
பேரிடி யதிருது பெருமின்னல் யொளிறுது .
பேடி பரிதி மேக குதிருக்குள் யொளியுது !
விடியலைத் தேடாதே மேகமே உனக்கென்று ஒரு
விடிவெள்ளி இருளில் முளைக்கும் !
வீண்சோக மெதற்க்கினி உன் விழிநீர் யழியும் 
வெண்மேக கூட்டத்தின் ஆட்டமது யொழியும் !
-Siva

மழை மேகத்தில் ஒளிந்திருக்கும் ஒரு இனவெறியாட்டம் என் சிந்தனையில் கொட்டிய கவிதை !

குறள் வெண்பா

இல் யில்லாதான் வாழ்வின் மேன்மை 
எல்யில்லா தரணிபோ லற்று 
-Siva 

இது நான் எழுதிய முதல் குறள் வெண்பா . மனைவி இல்லாத வாழ்கை சூரியன் இல்லாத பூமி போல் இருண்டுவிடும் என்பது இதன் பொருள் .

பெண்கல்வி

தாய்நாடும்  ,தாய்மொழிம்  ,ஆறும் ,ஆழியும் 
தரணியில் பெண்மையே !

அவளின் கல்வி, வாழ்க்கைக்கு ஒளி என்பது 

ஊரரிந்த உண்மையே !

மூடரின் சூழ்ச்சியில் முந்நூறு ஆண்டுகள் 

முடங்கி கிடந்த  பெண்மை எங்கே தேடு !

அவளின் கல்வியறிவால் கைவிளங்கு உடைந்து 

எழுச்சி பெற்றது இந்த நாடு !

அடுபாங்கரை அவள் இடம் ,மகபேறு அவள் தொழில் என்றீர்

பெரும்பேறு பெற்று இன்று கலங்கரை விளக்கமாய் பெண்டீர் .

பாருக்கு பெண் வலியென கூறிய இதயமே

பார் அவளை விண்வெளியிலே இனி அவள் விடிவிற்கு உதயமே !

-Siva


பெண்கல்வி  பற்றி நான் எழுதிய முதற்கவிதை . மென்பொருள் நிறுவனத்திற்காக நான்  தொலைத்த தமிழை தேடித்தந்து ,இன்றும் தொலையாமல் பத்திரமாக பார்த்துக்கொள்ள வைத்த பெருமை இந்த கவிதையையே சேரும் ..