Tuesday, October 18, 2016

நினைவு துகள்

குளிர்பான குடுவைக்குள் குமிழ்களாய்,
 நீ தந்த நினைவு துகள்கள் 
வெளியேர இடமின்றி 
உள்ளுக்குள் குமுறுதடி!

Tuesday, April 19, 2016

நாம்

விதி வீசிச்சென்ற தென்றலில்,
எங்கிருந்தோ பறந்து வந்து
ஒன்று சேர்ந்த காகிதங்கள் நாம்!
எழுதுகோல் ஏதும் இல்லாமல் ,
காதல் கவிதை ஒன்றை
இதயத்தில் எழுதிய கவிஞர்கள் நாம்!
ஓர் ஆத்திரங்கள் ,பல ஆனந்தங்கள்
சுழற்ச்சி முறையிலே காணும்
பல்லாளுமை கோளாறுகள் நாம்!
(Multiple personality disorder)
தேசம் விட்டு தேசம் வந்தும் ,
தேகம் விட்டு நேசம் நீங்கா
வித்தை அறிந்த வித்தகர்கள் நாம்!
அன்றில் பறவைகள் அன்றோடு
காதல் கிளிகள் இன்றோடு ,
என்றும் மெய்காதலின் காதலர்கள் நாம் !!!
-Siva

Sunday, February 21, 2016

சுமை

இரண்டு மணி என்பதை,
இமைகள் தான் அறியுமோ?
புரண்டு தான் படுத்தாலும்,அதன்
சுமைகள் என்ன குறையுமோ?

பாலுக்காக அழவில்லை
உன் தோளுக்காக அழுகிறேன்,
கால்களை உன் மீது போட்டு,
விளையாட தானே விழைகிறேன்!

பள்ளியில் பயின்றதை,
பிள்ளை மொழியில் சொல்கிறேன்
அள்ளி என்னை எடுப்பாயோ!
இதழ் இரண்டையும் வில்லாக்கி,
முத்த அம்புகள் தொடுப்பாயோ?

கலைந்த என் கேசமும்,
உன்  கோதலுக்கு காத்திருக்க,
காதலோடு அதை செய்யாமல்
கூதலுக்குப் போர்வையில் புதைவாயோ?

புறமுதுகை காட்டுதல்,
போர் கதைகளோடு போகட்டும்,
பஞ்சனையிலும் என்னை பார்க்கவைத்து
வஞ்சனைகள் செய்வாயோ?

முன் கிள்ளியது நினைவில்லை,
பின் தள்ளியதும் பரவாயிள்லை
உன் கக்கத்திலே கை கோர்கிறேன்
பக்கத்தில் என்னை சேராயோ?

கண்ணீரின் சுவைகளை,
நா(ன்) இன்று சுவைக்க
உன் தூக்கத்திலே சிறுத்துளையிட்டு,
என் ஏக்கத்தை கொஞ்சம் பாராயோ?
உன் மடியியினில் தஞ்சம் தாராயோ????

-Siva

சந்தம்

உற்றவளின் நெற்றியிலே குங்குமம்,
பொற்றாமரை குளமின்னும்
ஒற்றை நிலவானதென்ன!

சிற்றிதழின் பற்றதனை விட்டிடவே,
உற்றவனின் சிந்தையெல்லாம்
வெற்றிடமாய் போனதென்ன!

நற்றவளின் சொற்றொடரும் நாவிலே,
கற்றவரின் கர்வமெல்லாம்
குற்றுயிராய் ஆனதென்ன!

சற்றவளின் பிற்றிடையின் அசைவிலே,
சுற்றலுக்கோர் முற்றுதலை
செம்பூமி வைத்ததென்ன!

கற்றாழை முற்றோடு வருப்பினி,
கொற்றவளின் கையிரண்டும்
தொட்டழியும் வேகமென்ன!

எற்றேனும் சிற்றாராய்  சினுங்கினால் ,
உற்றவளே பெற்றவள்ப்போல்
உருமாறும் மாயமென்ன!!!!

-Siva

காதல்ப் போர்

உன் விழி நடத்திய பனிப்போரில்
வீழ்ந்தது என் இதயமே,
உள்ளிருந்த உயிரும் எங்கே?
விட்டு வைக்கவில்லை அதையுமே!

உன் அசைவுகளை உளவு பார்க்கும்
ஒற்றர்ப்போல் என் விழி ஆகும்.
நீயிருக்கும் இடம் தேடி
காரணங்கள் ஏதுமின்றி,
தோரணம் கட்டிய வாரணமாய்
தானாக என் கால்கள் போகும்!

அலையாடும் உன் குழல் இழைகள்
விளையாட்டாய் என் தோளுரச,
உறங்கி கொண்டிருந்த உணர்வுகள்
பீரங்கி குண்டுகளை வீசிடும்,
இறங்கி வந்து என் வாய்,
இதயத்தோடு இதமாய் பேசிடும்!

சதை மூடிய என் இதயதேசத்தில்
உன் இதழ்மொழி ஏவுகனைகள்
நுன் விதைகளாக விழுந்திடும்,
பதை பதைத்து நான் பார்கையிலே,
அனு கதிர்களாக அது எழுந்திடும்!

அழகெனும் ஆயுதமேந்தி நீ,
அறங்கேற்றும் காதல் போர் குற்றம்
ஐநாசபைகள் கூடினாலும் தொடரட்டும்,
என்றேனும் உன் நேசக்கொடி
என் தேகம் முழுவதும் படரட்டும்!!

- Siva.