Sunday, February 21, 2016

சுமை

இரண்டு மணி என்பதை,
இமைகள் தான் அறியுமோ?
புரண்டு தான் படுத்தாலும்,அதன்
சுமைகள் என்ன குறையுமோ?

பாலுக்காக அழவில்லை
உன் தோளுக்காக அழுகிறேன்,
கால்களை உன் மீது போட்டு,
விளையாட தானே விழைகிறேன்!

பள்ளியில் பயின்றதை,
பிள்ளை மொழியில் சொல்கிறேன்
அள்ளி என்னை எடுப்பாயோ!
இதழ் இரண்டையும் வில்லாக்கி,
முத்த அம்புகள் தொடுப்பாயோ?

கலைந்த என் கேசமும்,
உன்  கோதலுக்கு காத்திருக்க,
காதலோடு அதை செய்யாமல்
கூதலுக்குப் போர்வையில் புதைவாயோ?

புறமுதுகை காட்டுதல்,
போர் கதைகளோடு போகட்டும்,
பஞ்சனையிலும் என்னை பார்க்கவைத்து
வஞ்சனைகள் செய்வாயோ?

முன் கிள்ளியது நினைவில்லை,
பின் தள்ளியதும் பரவாயிள்லை
உன் கக்கத்திலே கை கோர்கிறேன்
பக்கத்தில் என்னை சேராயோ?

கண்ணீரின் சுவைகளை,
நா(ன்) இன்று சுவைக்க
உன் தூக்கத்திலே சிறுத்துளையிட்டு,
என் ஏக்கத்தை கொஞ்சம் பாராயோ?
உன் மடியியினில் தஞ்சம் தாராயோ????

-Siva

No comments:

Post a Comment