Sunday, March 22, 2015

கவியீர்ப்பு விசை

கவியீர்ப்பின் விசை குறைந்து,
வார்த்தைகளை தேடி நான்
காத்திருந்த நாட்கள் உன்டு.
உன்னை பற்றி கவி எழுத,
புவிஈர்ப்பு விசையில் வார்த்தைகள்
தன்னாலே சிந்தையில் விழுவதுன்டு! 


பாவைகள் பல நூறு விளையாட
உனக்காக காத்திருக்கும்,
தேவைகள் அவை இல்லையென்று
என் தோள்களில் ஆட துடித்திடுவாய்,
உயிரற்ற பொம்மைகலெல்லாம்,
பொறாமைகளாய் என் மீது
உருமாற பார்ப்பதுன்டு !

கனத்த சரீரம் என்று
கண்கலங்கிய காலம் உன்டு .
கழுத்தை நீ சுற்றி கொண்டு
வயிற்றில் போடும் ஆட்டம் கண்டு,
வரம் வாங்கிய உடம்பி்து
உனக்காக என நினைப்பதுன்டு !

கண்ணாடி முன் நின்று
ஒப்பனைகள் நான் செய்தால்,
அப்படியே நீயும் செய்வாய்,
பின்னாடி நிற்பது பிள்ளையா?
பனிதுளியின் மேல் ஒரு
பிழையான பிம்பமா என ,
அடிக்கடி நானும் குழம்பியதுன்டு!

ஆனா ஆவன்னா நீ சொல்ல,
தேனாய் காதினில் அது செல்ல,
பள்ளிக்கூடம் செல்லாமல் நீ
சொல்லும் பாடம் கண்டு,
கற்பூரம் உன் புத்தியென்று
கர்வம் கொண்ட நேரமுண்டு!

இரண்டு அகவைக்குள் நீ
செய்தது மாயம் என்றால்,
உருண்டோடும் வருடத்தில்,
கரை புரண்டோடும் இன்பங்களை
கண்முன்னே கான,
காலயந்திரத்தை கொஞ்சம்,
பின்னோக்கி திருப்ப
நெஞ்சம் நிறைய ஆசையுன்டு!!
-Siva