Saturday, June 7, 2014

காதலியின் கேள்விகள்

அவளை போல் ஒரு அழகியை 
அருகினில் காட்ட சொல்வாள், 
குவளை நீரை தரையில் தெளிப்பேன், 
குனித்து அவளை பார்த்திட சொல்வேன்,
ஒன்றல்ல, ஓராயிரம் அழகிகள் 
ஒனக்கு முன்னாடி என்பேன்!


நிலவை முத்தமிடிவது அவள் 
நிறைவேறாத ஆசை என்பாள்,
அவள் இதழுக்கு அவள் நெற்றி,
அருகில் இல்லை என்று,
அழகாய் நிதர்சனம் சொல்வேன்!

காதல் எப்படி இருக்கும் என்று
காதினில் செல்லமாய் கேட்பாள்,
தவழும் நம் பிள்ளை போலென்று
தயங்காமல் சொல்வேன்!

உயிரை விடுவது என்றால்
உண்மையில் என்ன என்று கேட்பாள்,
ஊருக்கு உன்னை கூட்டி சென்று
உன் வீட்டில் விடுவது என்பேன்!!!!

நான் இல்லாத வாழ்க்கை ,
எப்படி இருக்கும் என
நயம்பட கேட்பது போலென்னுவாள்,
கண்ணுக்கு தெரியாத தூசி,
கண்ணுக்குள் புகுந்து ,
கண்ணையே உறுத்துவது போல,
காலம் முழுவதும் அழ வைக்கும் என்பேன்!!

-Siva

No comments:

Post a Comment