Wednesday, June 25, 2014

அமைதி தேசத்து அரசன்

அமைதி தேசத்து அரசன் நீ,
மூன்று தமிழில் மூத்தவன் நீ,
சுயநலமில்லா சுந்தரன் நீ,
சோர்ந்து நான் போகமல்,
சேர்ந்து விளையாடும் நண்பன் நீ,
தியாகம் என்ற மகுடத்தை,
தலையில் சூடிய மன்னன் நீ,
தீயாக காத்து என்றும், ஒரு
தாயாக ஆன அண்ணன் நீ!

ரொட்டி துண்ட உன் பாதையில
கொட்டி கொண்டு நீ நடந்த,
குட்டி எறும்பைப் போலே நானும்
கெட்டியாக பின் தொடர்ந்தேன்,
கூட்டி போன தூரத்தை
எட்டி நானும் பார்க்கையில,
எட்டி பிடிக்க முடியா உயரமென்று,
தட்டி கொடுத்தேன்,உன் தோள்மேல!!

உன் வெற்றி பாதையில்,
வலம் வரும் தேர் நான்
என் வெற்றி மாலையில்,
ஒளிந்திற்கும் நார் நீ !
சாம்பலாகி நான் சரிந்தபோது,
ஆம்பலாக்கி் பூக்க செய்தாய்!
தம்பி கைமீது,நம்பிக்கை வைத்து
தன்னமிக்கை ஊட்டினாய்!
திறமைசாலி நானென்று ,
திக்கெட்டும் முழங்க செய்தாய்!

எந்த தேசம் நீ சென்றபோதும்,
என் நேசம் அங்கிருக்கும்,
என் சுவாசம் நின்றபோதும்,
உயிரினில் உன் பங்கிருக்கும்!
பாண்டவரின் புகழை பாட,
பழைய பாரதம் இருப்பதைப்போல்,
நம் புகழை நாளும் பாட,
நாளைய பாரதம் காத்திருக்கும்!
விமானம் ஏறி விரைந்து வா,என்
வின்மீன்கள் உனக்காக பூத்திருக்கும்!

-Siva

No comments:

Post a Comment