Wednesday, June 25, 2014

பெண் காதல்

கதைகளில் படித்த காதலை,என்
கண் முன்னே காட்டினாய்,
புதிதாய் துடித்த என் இதயத்தை,
பூவுக்குள் வைத்து பூட்டினாய்!
நினைத்து நினைத்து பார்த்து,என்
நிழலுக்கும் வெட்கத்தை ஊட்டினாய்!
மைவிழி பார்வையில் மையல் கொண்டு,
மழையாக மனதினில் ஊற்றினாய் !

நாசி புகும் சிறு தூசியுமறியும்,
என் தும்மல், உன்னை நினைத்தே!
கூந்தல் கலைக்கும் காற்றும் அறியும்,
கைகோதி நான் சரிசெய்வது,
உன் கவனத்தை ஈர்க்கவே!
நிலம் பார்த்து நான் நடப்பது,
வான் நிலவும் கூட அறியும்,
நீ என்னை பார்க்க வேண்டியே!

ஒரு மணி நேர ஒப்பனையெல்லாம் ,
ஓரக்கண் கொண்டு பார்க்காமல்,
ஒழுக்கமானவன் போல் நடிப்பாய்!
ஆடையின் இடைவெளி போதுமென்று,
அருகினில் நெருங்கி அமர்ந்தால்,
தெரியாமல் செய்த பிழையென்று,
தள்ளி சென்று மன்னிப்பும கேட்பாய்!

பாறாங்கல் பாரமா, உன்னை
பார்க்காத இதயம் கனக்கும்,
பார்த்து நீ போனாலே,
பசும்புல்லா எடை இழக்கும்!
பாசக்காயிற எனக்குள்ள வீசுவாய்,
காதல் காலன் நானென்று சொல்வாய்,
பாதியில விட்டு போய் உசுரோட கொல்வாய்!

இரண்டு நிமிடம் நீ பேசியதை,
இரவுமுழுவதும் இமைமூடாமல்,
இதயதுக்குள்ள எழுதி பார்ப்பேன்!
பகல் வேலை வந்த பின்பும்,
பைத்தியம் போல் அதையே
நானும் சொல்லி தீர்ப்பேன்!

பூ விரி்ந்தும் தெரியாத வண்டுப் போல்,
புரிந்தும் புரியாத மண்டுப் போல்,
உன்னை சுற்றி சுற்றி பார்த்திருப்பேன் ,
எப்போது புரியும் என் வலியென்று,
முப்பொழுதும் உனக்காக காத்திருப்பேன்!!

-Siva

No comments:

Post a Comment