Tuesday, April 1, 2014

ஆசை

மேகத்துள் மறைந்த மழையானது,
தாகத்திற்கு ஒரு துளி பறிகிடுமா?
ருசியோடு  கனித்தரும் சிறு மரம்,
பசியாற ஒரு கனி புசித்திடுமா?
களைப்போடு ஓடிவரும் இளம்காற்று,
இளைப்பாற சிறு நிழல் தேடிடுமா ?
செந்தணலில் சென்னி சுடும் சூரியன்,
எந்தநாளேனும் விசிறியால் வீசிடுமா?

சுயநல மனிதா,சொல்வதை கேளு!
மூன்று வீடு வச்சிருந்தாலும்,
மூச்சு போன பின்னாலே,
எந்த வீடும் உனக்கில்ல,
ஆட்டம் முடிந்த பின்னாலே,
அடக்கமாவ அந்த காட்டுக்குள்ள!
சுற்றியுள்ள நிலமெல்லாம் ,
பற்றிக்கொள்ள தவித்தாலும் ,
மண்வசம் நீ போனப்பின்னே,
நெற்றி காசும் கூட ஒனக்கில்ல!

இன வேறுபாடு என்பதெல்லாம்,
இயற்கை அறியாது!
தனக்கில்லா ஒரு வாழ்க்கைய,
தரணியில் வாழுது!
இயற்கை போலொரு வாழ்க்கை
இங்கே இல்லாவிடில்,
இயற்கையோடு வாழ பழகு!
அறவே கூடாதென்று சொல்ல, நான்
ஆதிகால புத்தனில்ல!
அளவா ஆசைப்படுவது என்றும்,
அவனியில குத்தமில்ல!

-Siva

No comments:

Post a Comment