Saturday, April 5, 2014

காதல் கவிதை

அவள் கால்பட்டழியும் பூக்களெல்லாம்
தான் அழகென்று தலைக்கனம் கொண்ட,
தற்கொலை படைகளே!
கசக்கிப்போட்ட மிட்டாய் காகிதமும் ,
கண்ணை கசக்கி நிற்கும்
அவள் இதழ் தொட முடியா ஏக்கத்தினாலே!
காலை தழுவும் காலனிகளும்
உறங்கும் போது உலரி கொட்டும் ,
அவள் பாதம் பார்க்க முடியா பிரிவினாலே!

விடியலில் பஞ்சனையும் விசும்பும்
விலகியவள் இருக்கும் காரணத்தினாலே !
இறுமாப்புடன் இறக்கும் பட்டுபூச்சி
இவள் இடை தொட்டாட இருப்பதாலே!
இளம்காற்றும் கூட  இலவசம் அறிவிக்கும்,
இவள் மூச்சி வாங்க ஓடியதாலே!
தலை சீவும் சீப்பும் இன்று காவலிருக்கும்,
அவள் கூந்தல் அதில் சிக்குவதாலே!

இருமலை நடுவில் எட்டி பாக்கும் சூரியன்
இவளை ஒருதலை காதல் கொண்டதாலே!
நடுநிசியில் மின்னும் நட்சதிரெமெல்லாம்
இவளை தரிசிக்க காத்திருக்கும் ரசிகர்களே!
காட்டருவி என்பதெல்லாம் இவளின்
காதல் தோல்வியில் கலங்கிய கண்ணீரே!

-Siva

No comments:

Post a Comment