Wednesday, April 2, 2014

அடுக்குமாடி வாழ்க்கை

வத்திபெட்டிய அடுக்கி வச்சி
வாழ்க்கை இங்கே நடக்குது ,
கத்துக்குட்டிய போல ஒன்றும் ,
கத்துக்கொள்ளாம காலம்போகுது!

ஊட்டிவிட்டு எம்புள்ளைக்கு
பாட்டிக்கதைய யார் சொல்ல,
பெத்தவங்க பக்கத்தில இல்லாம!
படைக்கு நாளும் அஞ்சுரோம்,எங்க
பந்த பாசம் அருகில இல்லாம!
ஆயிரம் வீடு அடுக்கி வச்சாலும் ,
அனாதயா தானே இருக்கிறோம்
ஆதரவு ஏதும் இல்லாம!

எதிர்வீட்டு உருவமெல்லாம்,காந்தத்தின்
இருவேறு துருவங்களோ?
எதிரே சென்றலே ,எட்டி பாக்கமா ஓடுதோ!
துள்ளலிசை பாட்ட,துக்கத்தில கேட்கிறோம்,
மேல இருக்கிறவனுக்கு என்ன மகிழ்ச்சியோ!
குதூகல நேரத்தில் குதிக்க கூட முடியில,
கீழே இருக்கிறவனுக்கு என்ன கஷ்டமோ!

குளமும்,மைதானமும்,சந்தையும்,சாப்பாடும்
உள்ளுக்குள்ளயே இருக்குது,
சவக்குழியோடு சுடுகாடும் சேர்த்திருந்தா,
சௌகரியமா இருக்கும் போய் சேர,
சதுர அடி அதிக விலையென்று,எங்க
சமாதியயும் அடுக்கிடாதீங்க ஓன்றுசேர !

-Siva

No comments:

Post a Comment