Monday, April 21, 2014

ஏழை மகள்

சேற்று நீரில் மின்னும் செல்ல நிலவே,
கீற்று குடை தரும் குளிர் நிழலே!
காற்று கையில் ஏந்திய கிள்ளை மொழியே ,
மாற்று பிழை என்ன செய்தாயோ,என்
மகளாக பிறந்தாயே மண்ணிலே!

புத்தாடை போட்டு பார்க்க,
புவியளவு ஆசை இருக்கு,
கந்தல் துணி வாங்கவே,
கையில தான் காசிருக்கு!
சத்தான உணவு கொடுக்க,
சத்தியமா விருப்பம் இருக்கு,
கூழுக்கும் வழி இல்லாம,
பத்தியமா வயிறு பசிச்சிருக்கு!

பஞ்சு மெத்தையில் உன்னை கிடத்த
நெஞ்சமெல்லாம் நெனப்பிருக்கு,
சாலையோரம் படுக்கை போட
சாக்கு பைதான் கிடைச்சிருக்கு!
கரடி பொம்மைய உங்கையில் கொடுக்க,
கண் நிரைய கனவிருக்கு
தலையில்லா பொம்மை தான்,குப்பை
தொட்டியில் உனக்கிருக்கு!

நொடியெல்லாம் உனை நினைக்க,இறைவா
படியில் பிச்சை எடுக்க வைத்தாயோ!
உன்னை வணங்காத கை வீனென்று,
ஊரார் கால் வணங்க வைத்தாயோ!
பிறக்கும் போதே இறக்க செய்யாமல்
வாழும் போது இரக்க ஏன் செய்தாயோ!

கர்ம வினை தான் காரணமென்றால்
தர்மமிகு மனிதர்களை தரனியில் தராயோ!
நீண்ட ஆயுளே வேண்டாம்,என்னை
மீண்டும் பிறவாமல் செய்வாயோ!
பிறந்தாலும் மறுமுறை புவியில்,
இரவாத வாழ்க்கை எனக்கு தாராயோ!


-Siva

No comments:

Post a Comment