Tuesday, April 8, 2014

மின்சாரம்

அனு ஓட்டத்திலே பிறந்தாய் ,
மறை எதிர்மறையில் தவழ்ந்தாய்,(+ve,-ve)
பிறந்த இடம் விட்டு பிற ஊருக்கு,
பாஸ்‌போர்ட் இல்லாமல் சென்றாய்!
சிறை பட்டு செல்லில்,(battery)
சிறு துயர் கொண்டாய்!

புகுந்த இடமெல்லாம்
புத்துணர்ச்சி தந்தாய்,
இறந்த சாதனத்திற்கும்,
இன்னுயிரை கொடுத்தாய்!
தகுந்த பாதுகாப்பில்லாமல்
தலைமேல் கை வைத்தால்,
மிகுந்த துயர் அளித்தாய் !

சிவனை போல் சக்தி தந்தாய்,அந்த
எமனை போல் அழிக்கவும் செய்தாய் !
எல்லாத்தையும் வேலை செய்ய வைத்து
எஜமானின் அந்தஸ்தை பெற்றாய்!
உன் ஓட்டம் நின்றாலே ,
ஊர் ஆட்டமும் நின்றிடுதே!

உன்னை இன்று தேடுறோம்
உண்மையிலே வாடுறோம் !
எவன் ஆட்சியில் அமர்ந்தாலும்
எல்லாரையும் சாடுறோம்!
ஆருமாச அம்மாவின் ஆசையெல்லாம்,
அமாவாசை போல ஆனதேனோ!
இருண்ட கண்டம் போல் இந்தியாவிற்கு,
இருள்நாடு என்ற பெயரும் ஏனோ!

-Siva

No comments:

Post a Comment