Sunday, April 13, 2014

தாய்மை

பத்து மாத ரனமெல்லாம்,
செத்து பிழைத்த கனமெல்லாம்,
ஒத்த நொடியில் இவள் மறந்திடுவா!

மழை  ஏந்தும் மண்ணைப் போல
மழலையை மடியில் ஏந்தி,
மன மகிழ்ச்சி அடைந்திடுவா!

முகர முடியா மருந்தையெல்லாம்,
முத்துச்சரம் முகம் பார்த்து,இவள்
முப்பொழுதும் முழுங்கிடுவா!

படுக்கைக்கு ஓரடி இருந்தாலும்,தன்
பிள்ளைக்கு எல்லாத்தையும் கொடுத்து,
பக்கத்தில ஓரமா படுத்திருப்பா !

இறகடிக்காம பறக்கும் பருந்தைப் போல,
இமை ரெண்டும் மூடாமல் இருந்து,
சுமை எல்லாத்தையும் தாங்கிடுவா!

இருபத்திநான்கு மணி நேரமும்
இளம் பிஞ்சுக்காக  உழைத்தாலும் ,
இன்னும் கொஞ்ச நேரம் இரவல் கேட்ப்பா !

பூமியில எத்தனை சாமி இருந்தாலும்,
புதிதாக தாயாகும் பெண்ணெல்லாம்,
பூஜிக்க வேண்டிய சாமிகளப்பா!

-Siva

No comments:

Post a Comment