Tuesday, August 20, 2013

கால-இயந்திரம்

கால-இயந்திரம்  ஒன்னு கண்டுபிடிக்கணும் 
கால (சு)வடுகள் சில கண்முன்னே பாக்கணும் !

உணர்வுகளை  படைத்தவன் எவனென பாக்கணும் 
உணவுக்காக பசியை ஏன் படைத்தாயென கேக்கணும் !

உருவமற்ற ஒன்றில் உயர்வு தாழ்வு உருவாக்கியவனை தேடனும்
உன்னால் தான் ஊரிலே மதக்கலவரம் என சாடனும் !

பண்டமாற்றி பகிர்ந்துண்ண பழக்கம் ஒழித்து 
அண்டமாளும் பணத்தை புழக்கத்தில் விட்டவனை பழிக்கனும் !

விரும்பிக்கொடுத்த அன்பளிப்பை திரும்ப திரும்ப கேட்டு 
கையூட்டு(லஞ்சம்) என மாற்றிய கயவனை காலி பண்ணனும் !

தொழில் நான்கினை திரித்து கள்ளெண்ணை ஊற்றி 
கொழுந்து விட்டெரியும் சா(தீ)யை ஏற்றியவனை கொன்று தீர்க்கணும் !

அன்பு தோன்றிய காலம் எதுவென்று ஆராயிந்து போகனும் 
ஆயள் முழுக்க அங்கேயே கிடந்து நானும் சாகனும்!


-Siva

No comments:

Post a Comment